📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 09, 2026 07:07 PM

கரூர் கூட்டநெரிசல்: இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழக்கு; வரும் 14ம்தேதி சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை

கரூர் கூட்டநெரிசல்: இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழக்கு; வரும் 14ம்தேதி சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை

புதுடெல்லி,

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்கியதை ரத்து செய்ததற்கு எதிரான வழக்கை வரும் 14-ம் தேதி சுப்ரீம்கோர்ட்டு விசாரிக்கிறது.

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் உள்பட பலரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உள்ளது. இந்தநிலையில் கரூர் சம்பவத்தில் பலியானவர்களின் 31 பேர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான நியமன ஆணைகளை கடந்த ஜூலை 10-ந்தேதி கரூரில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.

ரத்து செய்த ஐகோர்ட்டு

இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நிர்வாகி தீரன் திருமுருகன் உள்ளிட்டோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை கடந்த 27-ந்தேதி விசாரித்த நீதிபதி, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய அரசாணையை ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

மேல்முறையீடு

ஆகஸ்டு 14-ல் விசாரணை