📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 10, 2026 03:30 PM

Mandaadi Public Review: வெற்றிமாறன் ஸ்டைலில் மிரட்டிட்டாரு..சூரியின் 'மண்டாடி' பப்ளிக் விமர்சனம்!

Mandaadi Public Review: வெற்றிமாறன் ஸ்டைலில் மிரட்டிட்டாரு..சூரியின் 'மண்டாடி' பப்ளிக் விமர்சனம்!

சென்னை: விடுதலை, கருடன், கொட்டுக்காளி, மாமன் படங்களின் தொடர் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, நடிகர் சூரி கதாநாயகனாக அவதாரமெடுத்துள்ள திரைப்படம் மண்டாடி. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனம் இதோ.

சூர்யாவின் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த மாணவர் ஒருவர், படம் சூப்பராக இருந்தது. படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை கண்கள் அங்கே இங்கே நகரவில்லை. மொத்தமாக திரையில் தான் கண்கள் இருந்தது. அந்த அளவுக்கு படம் நன்றாக இருந்தது. ஒரு காட்சி கூட லேக் ஆக இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு இல்லை. படத்தின் வசனங்கள், ஆக்ஷன் காட்சிகள் என அனைத்துமே சூப்பராக இருந்தது என்றார்.

சூரி பெர்ஃபாமன்ஸ்: அதேபோல் மற்றொரு ரசிகர், படம் வேற லெவலில் இருக்கிறது. அனைவரும் சென்று பார்க்கலாம். டையர் 1 ஹீரோனு அனௌன்ஸ் பண்ணலாம், அந்த அளவுக்கு படம் நன்றாக இருக்கிறது. மனுஷன் பின்னிருக்காரு. படம் வேற லெவலில் இருக்கிறது. படத்தின் விஷுவல்ஸ், சவுண்ட், பேக்ரவுண்ட் ஸ்கோர், பாடல்கள், படத்தில் இடம்பெற்றுள்ள பர்ஃபார்மன்ஸ் என ஒவ்வொரு விஷயத்தை நன்றாக ரசிக்கும் படி இருந்தது. இந்த மாதிரி நான் பொதுவாக சொல்லவே மாட்டேன். ஆனால், அவ்வளவு நல்லா இருக்கு. படத்தில் ஒவ்வொரு சீனும், ஒவ்வொரு சீக்வென்ஸும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக அந்த போட் சீக்வென்ஸ் இருக்கட்டும், ஃபைட் காட்சிகளா இருக்கட்டும், எல்லாமே சூப்பர்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சூரியை இப்போ டையர் 1 என்று சொல்கிறோமே, அந்த அளவுக்கு பர்ஃபார்ம் பண்ணியிருக்கிறார். இந்த மாதிரி ஒரு பெர்ஃபார்மன்ஸை சூரியிடம் இருந்து நான் எதிர்பார்க்கவே இல்லை. படம் ரொம்ப நல்லா வந்திருக்கிறது. எல்லாரும் குடும்பத்தோடு போய் பாருங்க. சூரியின் நடிப்பு வேற லெவலுக்கு கொண்டு போயிருக்காங்க என்றார்.

கடல் காட்சி தெறிக்குது: படம் பார்த்த மற்றொரு ரசிகர், சூர்யாவோட நடிப்பு வேற லெவலில் இருந்தது. ஒரு காமெடி நடிகருக்குள்ள ஹீரோவுக்கான இத்தனை திறமையாக என்ற மாதிரி படம் சூப்பரா போயிருக்குது. பெரிய பெரிய நடிகர்களை வைத்து பில்டப் பண்ணுற படத்தை விட, நல்ல கதையை தேர்வு செய்து அதில் நடித்தால் கூட தரமான படமாக இருக்கும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். மேலும் படத்தின் விஷுவல் பயங்கரமா இருக்கு. வெற்றிமாறனோட அசிஸ்டண்டின் இந்த படத்தின் இயக்குநர் என்பதால், அவர் எப்படி படத்தை எடுத்திருந்தால் எப்படி இருக்குமோ, அதே மாதிரி படம் இருக்கு. சூரி ரொம்ப ஹார்டு வொர்க் பண்ணி இருக்கிறார். கடல் சீன்ஸ்ல ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்து இருக்காங்க என்றார்.

சூரியின் கடுமையான உழைப்பு: சூரியின் கடுமையான உழைப்பை பாராட்டிய ரசிகர், சூரி வேற லெவல், அவருடைய இண்டர்வியூவில் சொல்லியிருந்த மாதிரி, இந்த படத்துக்காக நிறைய ஹார்டு வொர்க் பண்ணியிருக்காரு படத்தில் விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அது அதிகமாக திணிக்கப்பட்டது போல் தெரியவில்லை. முடிஞ்ச அளவுக்கு ரியாலிட்டியாகத்தான் எடுத்திருக்காங்க. கண்டிப்பாக பார்க்கணும். ரொம்ப சூப்பரா இருந்துச்சு. ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போச்சு. படம் பயங்கரமா இருக்கு என்றார்.