📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 08, 2026 03:33 AM

மலைக்கிராம மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற கூடாது: தேனியில் நடந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

மலைக்கிராம மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற கூடாது: தேனியில் நடந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மலைக்கிராம மக்கள்.

தேனி: புலிகள் காப்​பகம் என்ற பெயரில் மலைக்​கி​ராம மக்​களை வனப்​பகு​தி​யில் இருந்து வெளி​யேற்​றக்கூடாது. இதுகுறித்து தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்​டும் என வலியுறுத்​தி, தேனி மாவட்ட ஆட்​சியர்அலு​வல​கம் முன் பெருந்​திரள் ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

தேனி மாவட்​டம், ஆண்​டிபட்டி வட்​டத்​துக்கு உட்​பட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 98 மலைக் கிராமங்​கள் சில ஆண்​டு​களுக்கு முன்பு புலிகள் காப்​பக​மாக அறிவிக்​கப்​பட்​டன. அதைத் தொடர்ந்​து, வனத்​துறை​யினர் அங்​குள்ள மக்​களை வெளி​யேற்​றும் முயற்​சி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இதனால், இப்​பகு​தி​களில் விவ​சாயப் பணி​களும் கடுமையாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளன.

இதைக் கண்​டித்​து, மலைக்​கி​ராம மக்​கள் பல்​வேறு போராட்​டங்​களில் தொடர்ந்து ஈடு​பட்டு வரு​கின்​றனர். இதன் ஒருபகு​தி​யாக, தேனி ஆட்​சி​யர் அலு​வல​கம் முன் நேற்று பெருந்​திரள் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதில் 6 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மலைக்கி​ராம மக்​கள் பங்​கேற்​றனர். விவ​சா​யிகள் சங்க மாவட்​டச் செய​லா​ளர் டி.கண்​ணன் தலைமை வகித்​தார். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மத்​தி​யக் ​குழு உறுப்​பினர் கே.​பால​பார​தி,மலை​வாழ் மக்​கள் சங்க மாநிலத் தலை​வர் பி.டில்​லி​பாபு உள்பட ஏராளமானோர் கலந்​து​கொண்​டனர்.

தேனி ஆட்சியரிடம் மனு அளித்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மலை​வாழ் மக்கள் சங்க தலைவர் டில்​லி​பாபு. உடன் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. உள்ளிட்டோர்.

இதில் மார்க்​சிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் பேசும்போது, மலைக்கிராம மக்​களை வெளி​யேற்​றும் உச்ச நீதி​மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்​முறை​யீடு செய்ய வேண்​டும். வன உரிமைச் சட்​டப்​படி அங்கு வசிக்​கும் மக்​களுக்கு பட்டா வழங்க வேண்​டும். அது​வரை அவர்​களை அங்கிருந்து அப்​புறப்​படுத்​தக் கூடாது. வனத்​துக்​குள் மலை மாடு​கள் மேய்ச்​சலுக்கு அனு​ம​திக்க வேண்​டும்’ என்​றார்.

ஆர்ப்​பாட்​டத்​தில் பங்​கேற்ற திமுக எம்​.பி. தங்க தமிழ்​செல்​வன் பேசும்போது, ‘மலை​வாழ் மக்​களை வெளி​யேற்​றக் கூடாது. மீறிவெளி​யேற்​றி​னால் எனது எம்​.பி.பதவியை ராஜி​னாமா செய்​வேன்’ என்​றார். இதில் திமுக, அதி​முக, அமமுக, தவெக உள்​ளிட்ட பல்​வேறு கட்​சிகளும் கலந்​து​கொண்டன. போராட்​டத்​துக்​குப் பிறகு ஆட்​சி​யர் இரா.​வைத்​திநாதனிடம் கோரிக்கை மனு வழங்​கப்​பட்​டது. வனக்​கி​ராம மக்​களின் போ​ராட்​டத்​தால், தேனி - மதுரை சாலை போக்​கு​வரத்​து பல மணி நேரம்​ பா​திக்​கப்​பட்​டது.