📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 18, 2026 07:04 AM

“மனைவி ரசிக்க மாட்டார்”

“மனைவி ரசிக்க மாட்டார்”

‘டாக்ஸிக் படத்தின் நெருக்கமான காட்சிகளைப் பார்க்கும்போது என் மனைவி அதை முழுமையாக ஏற்றுக்கொள்வார் என்று நான் நினைக்கவில்லை’ என நடிகர் யஷ் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் யஷ், நடிகையுடன் தான் நெருக்கமாக நடிக்குபோது தனது மனைவி ராதிகா பண்டிட் எப்படி எடுத்துக் கொள்வார் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், “கணவர் அப்படி நடிப்பதை எந்த மனைவியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நான் நினைக்கிறேன். நான் பொய் சொல்ல விரும்பவில்லை. எல்லா வாழ்க்கைத் துணைக்கும் அந்த எண்ணம் இருக்கும்.

ஆனால் முடிவில், இது எல்லாம் உருவாக்கப்பட்ட காட்சிகள். இது ஒரு கலை. இதன்மூலம் நாங்கள் எதை அடைய விரும்புகிறோம் என்பதுதான் முக்கியமானது.

மக்கள் சிலவற்றை தங்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும், சில விஷயங்களை தங்களது அறிவின் அடிப்படையிலும் செய்கிறார்கள்.

நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது அவை எனக்கும் அசவுகரியமாகவே இருக்கும். அந்தக் காட்சிகளில் நடிப்பது எனக்கும் எளிதல்ல. கதைக்கு அந்தக் காட்சிகள் தேவையாக இருக்கும்போது அப்படி நடிக்க வேண்டியது அவசியமாகிறது.

அப்படியான காட்சிகளில் என்னைப் பார்க்கும்போது, என் மனைவிக்கு நிச்சயமாக சங்கடமகத்தான் இருக்கும். அதற்கு அர்த்தம் அவர் அதைத் தவறாக எடுத்துக்கொள்வார் என்பது இல்லை. அவர் என்னை நம்புகிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக அவரும் ஒரு நடிகை என்பதால் , இந்த வேலைகளை அவர் புரிந்துகொள்வார். அங்கே தன் வேலையைச் செய்வது ஒரு நடிகன், அவரது கணவன் இல்லை என்பது அவருக்கு புரியும்” என்று தெரிவித்தார்.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டக்ஸிக்’. இந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியானதில் இருந்து யஷ் நடித்த சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்தப் படத்தில் யஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 26-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. கன்னடம் , ஆங்கில மொழிகளில் தயாராகும் இந்தப் படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.