📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 26, 2026 07:05 AM

மதுராந்தகம் தொகுதியில் எடப்பாடி அக்.3ம் தேதி பிரசாரம்

மதுராந்தகம் தொகுதியில் எடப்பாடி அக்.3ம் தேதி பிரசாரம்

மதுராந்தகம் தொகுதியில் எடப்பாடி அக்.3ம் தேதி பிரசாரம்

சென்னை: மதுராந்தகம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி அக்டோபர் 3ம் தேதி பிரசாரம் செய்கிறார்.இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து, 3.10.2026 அன்று தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி அக்டோபர் 3ம் தேதி (சனி) மாலை 4 மணிக்கு அச்சிறுப்பாக்கம், மாலை 5 மணிக்கு மதுராந்தகம் பகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.