📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 14, 2026 02:04 PM

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அபிஜித் தீப்கே

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அபிஜித் தீப்கே

புதுடெல்லி,

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியிர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு தொடர் போராட்டங்கள் காரணமாக ஜந்தர் மந்தர் பகுதி பிரச்சினைக்கு உரிய இடமாக மாறியது. இதன் காரணமாக அந்த பகுதியைச் சுற்றியுள்ள இடங்களுக்கு 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், போராட்ட இடம் என்ற பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தரை நீக்கி போலீசார் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். அத்துடன் வேறு 3 இடங்களை அறிவித்து இருக்கிறார்கள். இதற்கிடையே கட்சியின் பிற நிர்வாகிகள் சவுரவ்தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் நேற்று போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஜந்தர் மந்தர் சாலையில் உள்ள தடுப்புகளைத் தாண்டி குதித்தனர்.

கையில் தேசியக்கொடியை வைத்திருந்த அவர்கள், 'பாரத் மாதாகீ ஜே' மற்றும் 'இன்குலாப் ஜிந்தாபாத்' என கோஷங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து போலீசார் சென்று அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனையடுத்து சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகிய இருவருக்கும் 5 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த்தார். இந்த நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவு அளித்த மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சட்டவிரோத கைது நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக மு.க.ஸ்டாலின் சாருக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.