📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 05, 2026 11:04 AM

முதல்

முதல்

முதல்-அமைச்சர் அலுவலகம்

சென்னை தலைமைச் செயலகமான புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் முதல்-அமைச்சரின் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு இடப்பற்றாக்குறை நிலவுவதாலும், நிர்வாக ரீதியான பணிகளை மேலும் துரிதப்படுத்தும் வகையிலும், முதல்-அமைச்சர் அலுவலகத்தை அதே வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக அங்கு முதல்-அமைச்சரின் புதிய பிரத்யேக அறை, அதிநவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு அரங்கம் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்பு மற்றும் உட்புற வடிவமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை திட்டமிட்டது. இந்த பணிகளுக்காக பொதுப்பணித்துறை சார்பில் ரூ.5.54 கோடி மதிப்பீட் டில் 3 பிரிவுகளாக ஒப்பந்தம் கோரப்பட்டது.

32 சதவீதம் குறைவு

இதில் அரசு நிர்ணயித்த மதிப்பீட்டை விட 32 சதவீதம் குறைவாக, அதாவது ரூ.3.78 கோடிக்கு பணிகளை முடித்துக்கொடுப்பதாக குறிப்பிட்ட சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் (ராசி பில்டர்ஸ்) இந்த ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது. புதிய அலுவலகப் பணிகளை அடுத்த 3 மாதங்களுக்குள் முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளன.