📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 10, 2026 04:01 PM

முதலிடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து: தீர்மானத்திற்கு ஆதரித்த அனைவருக்கும் நன்றி - முதல்

முதலிடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து: தீர்மானத்திற்கு ஆதரித்த அனைவருக்கும் நன்றி - முதல்

அரசுத் துறை, கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும் வகையில், சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் என்றால் கெத்து

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பதுதான் மாநில உரிமை. தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. உணர்வோடு கலந்திருக்கக்கூடிய தமிழை பின்னுக்குத் தள்ளினால் எப்படி பொறுத்துக்கொள்வது?; தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலிடத்தில் இருக்க வேண்டும்; அது நம் உரிமை. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

திமுக ஆதரவு

ஒருமனதாக நிறைவேற்றம்

தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானத்திற்கு காங்கிரஸ், பாமக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து தனித்தீர்மானம் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அதிகாரப்பூர்வமான அறிவித்தார்.

இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் கட்டாயம் முதலில் பாடப்படவேண்டும் என்ற அரசினர் தனித்தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றி தந்தமைக்காக நன்றி தெரிவித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது;-

மனமார்ந்த நன்றிகள்

தமிழ் ஒரு மொழி மட்டுமன்று, அது ஒரு சிந்தனை-பண்பாடு-நாகரீகம்-அதோடு தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு என்பதை முழுமையாக உணர்ந்ததே நமது தமிழ்நாடு அரசு. மேலும், தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம், தமிழ்த்தாய்க்குச் செலுத்தப்படும் உயரிய மரியாதையாகும். இத்தீர்மானம் நிறைவேற்றிய இந்நன்னாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்! தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரட்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.