📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 18, 2026 05:03 PM

முதலமைச்சர் விஜய் தொகுதியில் தத்தளிக்கும் மக்கள்!

முதலமைச்சர் விஜய் தொகுதியில் தத்தளிக்கும் மக்கள்!

முதலமைச்சர் விஜய் தொகுதியில் தத்தளிக்கும் மக்கள்!

சென்னை பருவமழை காரணமாக முதல்வரின் பெரம்பூர் தொகுதியில் வெள்ளம் தேங்கியது.

முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் கன மழையால் அப்பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. திரும்பும் திசையெங்கும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மழை நீரில் தத்தளித்து கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் பழுதடைந்து ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆட்சி மாறினாலும் இங்கு எந்த மாறுபாடும் இல்லை, மழைநீரை அகற்ற மாநகராட்சி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனிடையே பெரம்பூர் தொகுதி முழுவதும் எங்கெல்லாம் மழை நீர் தேங்கி நிற்கிறதோ களத்திற்கு சென்று அதை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பிபி ரோடு முதல் கணேசபுரம் வரை மழைநீர் அதிகளவில் தேங்கும் பகுதிகளில், தண்ணீரை விரைவாக வெளியேற்றுவதற்காகத் மாநகராட்சி திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. தற்போது 6-க்கும் மேற்பட்ட மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு, தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.