📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 04, 2026 05:01 PM

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 95 ரூபாயாக சரிவு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 95 ரூபாயாக சரிவு

கடந்த 28-ந்தேதி 112 ரூபாயாக இருந்த கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை மீண்டும் சரிய தொடங்கியது.

நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோாடு, திருப்பூர், பல்லடம், கரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிப்பண்ணைகள் உள்ளன.

10 லட்சம் கோழிகள்

இந்த பண்ணைகள் மூலம் தினசரி 30 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயிக்கப்படுகிறது.

520 காசுகளாக நீடிப்பு

முட்டைக்கோழி விலையில் கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் 120 ரூபாயாக நீடிக்கிறது. இதே போல நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையிலும் கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் 520 காசுகளாக நீடிப்பது குறிப்பிடத்தக்கது.