📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 09, 2026 04:00 PM

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபெல் பரிசு

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபெல் பரிசு

ஜெனிவா: தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலரும் முன்னாள் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியுமான 85 வயது நவநீதம் பிள்ளைக்கு 2026ஆம் ஆண்டிற்கான நோபெல் அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி, அனைத்துலகச் சட்டத்தைப் பாதுகாப்பதில் அவர் மேற்கொண்ட உறுதியான முயற்சிகளுக்காக அவருக்கு அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்படுவதாக நார்வேஜிய நோபெல் பரிசுக் குழுவின் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னஸ் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) அறிவித்தார்.

திருவாட்டி நவநீதம் பிள்ளை ‘உறுதியான, தார்மீக நெறிமுறையைக் கொண்டவர்’ என்றும் துணிச்சலுடன் செயல்பட்டு அனைத்துலகச் சட்டத்தின் எல்லைகளையும் தாக்கத்தையும் விரிவுபடுத்தியவர் என்றும் அவர் பாராட்டினார்.

தென்னாப்பிரிக்காவில் இனப்பாகுபாட்டிற்கு எதிராகப் போராடும் வழக்கறிஞராகத் தம்பயணத்தைத் தொடங்கிய திருவாட்டி நவநீதம் பிள்ளை, தென்னாப்பிரிக்க உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலேயர் அல்லாத பெண் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.

அவர் முன்னர் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகவும் பாலஸ்தீன ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கான ஐநா விசாரணை ஆணையத்தின் தலைவராகவும் ருவாண்டாவுக்கான அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் திருவாட்டி நவநீதம் பிள்ளை சமர்ப்பித்த ஐநா அறிக்கை, காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை புரிந்ததாகவும், அந்நாட்டு உயர் தலைவர்கள் அதற்குத் தூண்டுதலாக இருந்ததாகவும் குற்றம் சாட்டியது.

பல்வேறு உலக நாடுகளையும் தலைவர்களையும் பொறுப்புக்கூற வைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளித்தவராக அவர் போற்றப்படுகிறார்.

திருவாட்டி நவநீதம் பிள்ளையின் இந்த வெற்றியை ஐநா மனித உரிமைகள் அமைப்பு வரவேற்றுள்ளது. “இது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி. மனித உரிமைகளைப் பாதுகாக்க இதுபோன்ற அர்ப்பணிப்புள்ள குரல்கள் உலகிற்குத் தேவை,” என ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐநா மனித உரிமைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷாபியா மண்டூ கூறினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

டர்பனில், நாராயணசாமி, சாந்தம்மா ஆகியோருக்கு 1941ஆம் ஆண்டு பிறந்த இவரின் தாத்தா பாட்டி, 1890களில் தென்னாப்பிரிக்கத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள்.

திருவாட்டி நவநீதம் பிள்ளை 1963ல் நேடால் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும் 1965ல் சட்டத்துறையில் பட்டமும் பெற்றார். 1988ல் ஹார்வர்ட் சட்டப் பல்கலையில் அவர் முனைவர் பட்டம் பெற்றார்.1973ல் நெல்சன் மண்டேலா சிறையில் இருந்தபோது அவருக்கு உதவி செய்தவர் திருவாட்டி நவநீதம் பிள்ளை.