📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 08, 2026 10:02 AM

நயன்தாரா ஏன் வரல? மேடையில் நயனை வச்சு செஞ்ச ராதிகா.. செம நக்கல்யா உனக்கு.. நெட்டிசன்ஸ் ட்ரோல்!

நயன்தாரா ஏன் வரல? மேடையில் நயனை வச்சு செஞ்ச ராதிகா.. செம நக்கல்யா உனக்கு.. நெட்டிசன்ஸ் ட்ரோல்!

சென்னை: அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர் கவின் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முதன்மை கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து, கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஹாய்' . இப்படத்தின் வெற்றி விழா சென்னையி நடைபெற்றது. இதில் ராதிகா, நயன்தாராவை மறைமுகமாக கிண்டலடித்துள்ளார்.

ஹாய் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் மூத்த நடிகர்களான ராதிகா சரத்குமார், பிரபு மற்றும் மறைந்த மூத்த நடிகர் பாக்யராஜ் ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வெளியான 10 நாட்களிலேயே உலகளவில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள நிலையில், வரும் நாட்களில் இதன் வசூல் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராதிகா பேச்சு: இப்படத்தின் வெற்றிவில் கலந்து கொண்டு பேசிய ராதிகா சரத்குமார், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்திருப்பது மிகவும் சக்திவாய்ந்த ஒரு கூட்டணி. கேமராவுக்கு முன்பாக நயன்தாராவின் அபார திறமையும், கேமராவுக்கு பின்னால் விக்னேஷ் சிவனின் படைப்பு பார்வையும் இணைந்திருப்பது மிகவும் அழகான காம்பினேஷன். இருவரின் வெற்றியையும் பார்த்து நான் ரொம்பவே மகிழ்ச்சியடைகிறேன்.

வலிமையான பெண்: நயன்தாரா பார்ப்பதற்கு வெளியே மிகவும் மென்மையானவராக தெரிந்தாலும், அவர் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் வலிமையானவர். அவரது இந்த மாபெரும் வெற்றிக்கு அந்த மன உறுதியும் அர்ப்பணிப்பும்தான் முக்கிய காரணம். நயன்தாரா தனது முடியைச் சீவுவது முதல், தன்னை சுற்றியுள்ள ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்திலும் எவ்வளவு கவனம் செலுத்துவார் என்பதை நான் பார்த்திருக்கிறேன். அவரது இத்தகைய அர்ப்பணிப்பையும் உழைப்பையும் பார்த்தாலே அவர் ஏன் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய இடத்தை அடைந்திருக்கிறார் என்பது தெரியும்.

நக்கல் செய்த ராதிகா: இப்படி நயன்தாராவை பற்றிப் பெருமிதமாகப் பேசிக்கொண்டே இருந்த ராதிகா, திடீரென , ஏன் நயன்தாரா வரவில்லை என கேட்டு அதிரவைத்தார். உடனடி விபரீதத்தை உணர்ந்து நிலைமையை சமாளிக்கும் விதமாக, ஓ... அப்புறம் வந்து நன்றி சொல்லுவாங்களா? எனச் சமாளித்துவிட்டு, சரி, அவங்க சார்பா நானே இங்க எல்லோருக்கும் நன்றி சொல்லிக்கிறேன் என்று சிரித்தபடியே பேச்சை முடித்துக் கொண்டார். நயன்தாரா தான் நடிக்கும் எந்தவொரு படத்தின் ஆடியோ லான்ச், புரமோஷன் அல்லது வெற்றி விழா போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டார் என்பது சினிமா உலகமும் ரசிகர்களும் நன்கறிந்த விஷயம். இது தெரிந்திருந்தும், ராதிகா மேடையிலேயே நயன்தாராவை இப்படி நக்கலாக பேசி சமாளித்ததை சரியாக நோட் செய்த இணையவாசிகள் 'நக்கல்யா உனக்கு' அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகின்றனர்.