📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 08, 2026 02:01 PM

ஒரு குழந்தைக்காக பிக் பாஸை ஒதுக்கிய ஜாய் கிரிஸில்டா.. 3 குழந்தைகளை விட்டு வந்த சிங்கிள் மதர் அஸ்மிதா!

ஒரு குழந்தைக்காக பிக் பாஸை ஒதுக்கிய ஜாய் கிரிஸில்டா.. 3 குழந்தைகளை விட்டு வந்த சிங்கிள் மதர் அஸ்மிதா!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதா பங்கேற்றுள்ளார். கடந்த ஆண்டு தான் அஸ்மிதாவுக்கு 3வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தனது 3 குழந்தைகளை விட்டு விட்டு அஸ்மிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த நிலையில், சோஷியல் மீடியாவில் ட்ரோல்கள் குவியத் தொடங்கி உள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில சீசன்களாகவே ஹெவி பிஆர் ஒர்க் உடன் ஓடிக்கொண்டிருக்கிறது. உள்ளே போட்டியாளர்கள் விளையாடுவதை விட வெளியே அவர்களது டீம் விளையாடுவது தான் அதிகமாக உள்ளது.

ஒவ்வொரு போட்டியாளர்களையும் புரமோட் செய்வதை விட அந்த போட்டியாளருக்கு டஃப்பான போட்டியாளர்களை காலி பண்ணும் வேலையை பக்காவாக பார்த்து வருகின்றனர். சோஷியல் மீடியாவில் பிரபலமான அஸ்மிதா இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரை ஆரம்பத்திலேயே டார்கெட் செய்து அடிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஜாய் கிரிஸில்டா வரல: மாதம்பட்டி ரங்கராஜின் 2வது மனைவி ஜாய் கிரிஸில்டா பிக் பாஸ் 10ல் பங்கேற்கப் போகிறார் என்று தகவல்கள் கசிந்த நிலையில், பெத்த குழந்தையை விட்டுட்டு பிக் பாஸ் போறாரா என நரேட்டிவ் செட் செய்து அவரை அடிக்க ஆரம்பித்தனர். கடைசியில், தனக்கு குழந்தை தான் முக்கியம் என்றும் பிக் பாஸ் போகல ஆளை விடுங்க என போஸ்ட் போட்டு அமைதியாக்கினார்.

3 குழந்தைகளை விட்டுட்டு வந்த சிங்கிள் மதர்: கடந்த ஆண்டு அஸ்மிதாவுக்கும் அவரது கணவர் ஸ்ரீ விஷ்ணுவுக்கும் இடையே கடந்த ஆண்டு விவாகரத்து ஏற்பட்டு பிரிந்தனர். ஸ்ரீ விஷ்ணு மீது மோசடி புகார்கள், பாலியல் புகார்கள் வந்த நிலையில், அவரை பிரிந்து வாழ அஸ்மிதா முடிவெடுத்தார். அஸ்மிதா 3 குழந்தைகளுடன் சிங்கிள் மதராக இருந்தாலும், மேக்கப் மற்றும் ஃபேஷன் துறையில் லீடிங் லேடியாக கலக்கி வருகிறார். அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற நிலையில், அவரது 3 குழந்தைகளும் டிவியில் அவரை பார்க்கும் போட்டோவை அஸ்மிதாவின் சகோதரி ஷேர் செய்துள்ளார். பிஆர் வேலைகளை தாண்டி அஸ்மிதா இந்த சீசனில் எதுவரை செல்வார் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.