📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 01, 2026 05:04 PM

ஒரு மாதத்துக்குப் பிறகு ஈரானின் முக்கிய தீவு மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்

ஒரு மாதத்துக்குப் பிறகு ஈரானின் முக்கிய தீவு மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்

டெஹ்ரான்: ஒரு மாதத்​துக்​குப் பிறகு ஈரானின் முக்​கிய தீவு மீது அமெரிக்க போர் விமானங்​கள் நேற்று திடீர் தாக்​குதல் நடத்​தின. இதில் ஈரானின் ராக்​கெட் ஏவுதளங்​கள், கடல் கண்​ணிவெடிகளை வீசும் கப்​பல் மற்​றும் படகு​கள் அழிக்​கப்​பட்​டன.

அமெரிக்​கா, ஈரான் இடையே ஆகஸ்ட் 17-ம் தேதி போர் நிறுத்​தம் முடிவுக்கு வந்​தது. சுமார் ஒரு மாதத்​துக்​குப் பிறகு ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி பகு​தி​யில் அமைந்​துள்ள லராக் தீவை குறி​வைத்து அமெரிக்க போர் விமானங்​கள் ஞாயிற்​றுக்​கிழமை நள்ளிர​வில் திடீர் தாக்​குதல் நடத்​தின. அந்​தத் தீவில் அமைக்கப்பட்​டிருந்த 2 ஏவு​கணை தளங்​கள், கடல் கண்ணிவெடிகளை வீசும் கப்​பல் மற்​றும் ஏராள​மான படகு​கள் அழிக்​கப்​பட்​டன. இதில் ஈரான் ராணுவ வீரர்​கள் பலர் உயிரிழந்ததாக​வும் ஏராள​மானோர் காயமடைந்​திருப்​ப​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

ஈரான் பதில் தாக்​குதல்

அமெரிக்க தாக்​குதலுக்​குப் பதிலடி​யாக ஜோர்​டானில் உள்ள இரு அமெரிக்க விமானப் படைத் தளங்​கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை​களை வீசி தாக்​குதல் நடத்​தி​யது. ஈரானின் வடக்​குப் பகு​தி​யில் இருந்து ஏவப்​பட்ட பாலிஸ்​டிக் ஏவு​கணை​கள் ஜோர்​டானின் கிங் ஹுசைன், அல் - அஸ்​ராக் விமானப்​படைத் தளங்​கள் நோக்கி சீறிப் பாய்ந்​தன. இதில் பெரும்​பாலான ஏவுகணை​கள் நடு​வானில் அழிக்​கப்​பட்​டன.

சில ஏவு​கணை​கள் ஜோர்​டான் விமானப் படைத் தளங்​களில் விழுந்து வெடித்​தன. மேலும் ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய் அரு​கே​யுள்ள அல் மின்​ஹாட் விமானப் படைத் தளத்தை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று ட்ரோன் மூலம் தாக்​குதல் நடத்தியது. அந்த ட்ரோன்​கள் நடு​வானில் அழிக்​கப்​பட்​டன. அமெரிக்​கா​வின் அத்​து​மீறல்​களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் ராணுவம் எச்​சரிக்கை விடுத்துள்ளது.

அதிபர் ட்ரம்ப் ஏஐ வீடியோ

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) மூலம் உரு​வாக்​கப்​பட்ட இரு வீடியோக்​களை நேற்று சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டார். அதில், ஈரானின் கச்சா எண்​ணெய் ஏற்​றுமதி தளமான கார்க் தீவு மீது ஏவு​கணை தாக்​குதல் நடத்​தப்​படு​வ​தாக சித்​தரிக்​கப்​பட்டு உள்​ளது.

கார்க் தீவில் உள்ள எண்​ணெய் கிணறுகள், எண்​ணெய் கப்​பல்​கள் தீப்​பிடித்து வெடித்​துச் சிதறும் காட்​சிகள் ஏஐ வீடியோக்​களில் இடம்​பெற்​றுள்​ளன. அமெரிக்​கா, ஈரான் இடையே மீண்​டும் போர் மூண்​டிருப்​ப​தால் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் நேற்று சுமார் 83 எண்​ணெய் கப்​பல்​கள் ஆங்​காங்கே நிறுத்​தப்​பட்​டன. இந்த ஜலசந்தி​யில் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து முழு​மை​யாக முடங்கியிருக்​கிறது.

திடீர் தாக்​குதல் ஏன்?

உலகின் மிக முக்​கிய கச்சா எண்​ணெய் வழித்​தட​மாக விளங்​கும் ஹார்​முஸ் ஜலசந்தி அமெரிக்​கா​வின் கட்​டுப்​பாட்​டின் கீழ் கொண்டு வரப்​படும் என்று கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறி​வித்​தார். இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி அவர் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட வரைபடத்​தில், ஹார்​முஸ் ஜலசந்தி அமெரிக்​கா​வின் ஒருங்​கிணைந்த பகு​தி​யாக சித்​தரிக்​கப்​பட்டு இருந்​தது.

ஈரானும் ஓமனும் அண்​மை​யில் நடத்​திய பேச்​சு​வார்த்​தை​யில் முக்கிய உடன்​பாடு எட்​டப்​பட்​டது. இதன்​படி அமெரிக்​கா​வின் தலை​யீடு இல்​லாமல் இரு நாடு​களும் இணைந்து ஹார்​முஸ் ஜலசந்​தியை நிர்​வகிக்க முடிவு எடுக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்தே ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கச்சா எண்​ணெய் கப்பல்கள் கடந்து செல்​லும் ஈரானின் லாரக் தீவை குறி​வைத்து அமெரிக்கா தாக்​குதல் நடத்தி உள்​ளது.

இந்த தீவு பகு​தி​யில் கச்சா எண்​ணெய் கப்​பல்​களிடம் இருந்து ஈரான் ராணுவம் தலா ரூ.19 கோடி சுங்​கக்​ கட்​ட​ணம்​ வசூலித்​து வந்​தது. ஈ​ரானுடன்​ இணைந்​து செயல்​பட்​​டால்​ ஓமனின்​ ஹார்​முஸ்​ ஜலசந்​தி பகுதி மீதும்​ மிகப்​பெரிய ​தாக்​குதல்​ நடத்​தப்​படும்​ என்​று அமெரிக்​க அதிபர்​ ட்​ரம்​ப்​ எச்​சரிக்​கை விடுத்​திருப்​ப​தாகக்​ கூறப்படுகிறது.