📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 25, 2026 11:04 AM

பால் கொள்முதல் விலையை ரூ.44 ஆக உயர்த்த பரிசீலனை: சட்டப்பேரவையில் அமைச்சர் சி.விஜயலட்சுமி தகவல்

பால் கொள்முதல் விலையை ரூ.44 ஆக உயர்த்த பரிசீலனை: சட்டப்பேரவையில் அமைச்சர் சி.விஜயலட்சுமி தகவல்

சென்னை: ​பால் கொள்​முதல் விலையை லிட்​டருக்கு ரூ.44 ஆக உயர்த்​து​வது குறித்து முதல்​வருடன் இணைந்து பரிசீலித்து முடி​வெடுக்​கப்​படும் என்று பால்​வளத் துறை அமைச்​சர் சி.​விஜயலட்​சுமி தெரி​வித்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் திமுக, அதி​முக உள்​ளிட்ட கட்​சிகளின் எம்​எல்​ஏக்​கள் பால் விலை உயர்வு தொடர்​பாக கவன ஈர்ப்பு தீர்​மானம் கொண்டு வந்​தனர்.

இது குறித்து திமுக எம்​எல்ஏ எ.வ.வேலு பேசி​ய​தாவது: தமிழகத்​தில் கேரள தனி​யார் நிறு​வனம் ஒரு லிட்​டர் ரூ.45.27-க்​கும், ஹட்​சன் ஆரோக்யா நிறு​வனம் ரூ.42-க்​கும் பாலை கொள்​முதல் செய்​கின்​றன.

ஆவின் நிறு​வனம் ரூ.41-க்கு தான் கொள்​முதல் செய்​கிறது. இதனால் பால் உற்​பத்​தி​யாளர்​கள் தனி​யாரிடம் பாலை விற்​கின்​றனர். ஆவினுக்கு பால் வரு​வது குறைந்​து​விட்​டது.

பால் உற்​பத்​தி​யாளர்​களுக்கு தீவன விலை கட்​டு​படி​யாக​வில்​லை. அதனால் அவர்​கள் லிட்​டருக்கு ரூ.45 கோரி போராட்​டங்​களை அறி​வித்​துள்​ளனர். பால் கூட்​டுறவு சங்​கங்​கள் நஷ்டத்​தில் இயங்​கு​கின்​றன.

எனவே பால் கொள்​முதல் விலையை உயர்த்​தி, ஆவினுக்கு அதிக பால் வரு​வதை உறு​தி​செய்ய வேண்​டும்.

முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி: பால் உற்​பத்​தி​யாளர்​கள் ஒரு லிட்​டர் பசும்​பால் ரூ.50 ஆகவும், எரு​மைப்​பால் ரூ.60 ஆகவும் உயர்த்த வேண்​டும் என வலி​யுறுத்தி வரு​கின்​றனர். இதை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

பின்​னர் அமைச்​சர் சி.​விஜயலட்​சுமி அளித்த பதில்: 2021-ல் முந்​தைய அரசு ஆவின் பால் பாக்​கெட் விற்​பனை விலையை லிட்​டருக்கு ரூ.3 குறைத்​த​தால், ஆவின் நிறு​வனத்​துக்கு ஆண்​டுக்கு ரூ.220 கோடி கூடு​தல் நஷ்டம் ஏற்​பட்​டது.

இந்த விலை குறைப்​பால் ஏற்​படும் நஷ்டத்தை ஈடு​செய்ய பால் கொள்​முதல் மற்​றும் விற்​பனையை அதி​கரிக்க எந்த நடவடிக்​கை​யும் எடுக்​காமல் மெத்​தனப்​போக்​குடன் செயல்​பட்​டது.

இதனால் பால் பொருட்​கள் உற்​பத்​தி​யும், விற்​பனை​யும் குறைந்து ஆவின் நிறு​வனத்​துக்கு மேலும் கூடு​தல் சுமை ஏற்​பட்​டுள்​ளது. ஆவின் கடுமை​யான நிதிச் சுமையை எதிர் கொண்​டிருந்த நிலை​யிலும், பால் உற்​பத்​தி​யாளர்​களின் நலனை கருத்​தில் கொண்​டு, கொள்​முதல் விலை ரூ.38-லிருந்து ரூ.41 ஆக ரூ.3 உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

இதனால் அரசுக்கு ஆண்​டுக்கு ரூ.300 கோடி கூடு​தல் செலவு ஏற்​படு​கிறது. தவெக தேர்​தல் அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ளபடி கொள்​முதல் விலையை லிட்​டருக்கு ரூ.44 ஆக உயர்த்தி வழங்​கு​வது தொடர்​பாக முதல்​வருடன் இணைந்​து, ஆவின் நிறு​வனத்​தின் நிதி​நிலை மற்​றும் பால் உற்​பத்​தி​யாளர்​களின் நலனை கருத்​தில்​ கொண்​டு பரிசீலித்​து ஒரு நல்​ல முடிவு எடுக்​கப்​படும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.