📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 25, 2026 02:01 AM

பிக்பாஸ் 10 ஆட்டம் ஆரம்பம்.. விஜய் சேதுபதி ரெடி! எப்போது தெரியுமா? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிக்பாஸ் 10 ஆட்டம் ஆரம்பம்.. விஜய் சேதுபதி ரெடி! எப்போது தெரியுமா? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: சின்னத்திரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் கிராண்ட் லாஞ்ச் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது பிக்பாஸ் தமிழ். இதுவரை ஒன்பது சீசன்களை கடந்து வந்துள்ள நிலையில், தற்போது பத்தாவது சீசனுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

செப்டம்பர் 6-ம் தேதி கிராண்ட் லாஞ்ச்: இந்நிலையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் கிராண்ட் லாஞ்ச் வரும் செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான புரமோவும் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

"ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா?" என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, பிக்பாஸ் வீட்டுக்குள் இந்த முறை யாரெல்லாம் களமிறங்கப் போகிறார்கள் என்ற கேள்வியையும் ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

மீண்டும் விஜய் சேதுபதி: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இந்த சீசனிலும் விஜய் சேதுபதி தொடர்கிறார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வந்த நிலையில், அவருக்குப் பிறகு விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கினார்.

விஜய் சேதுபதி தொகுத்த பிக்பாஸ் தமிழ் சீசன் 8 மற்றும் சீசன் 9 ஆகிய இரு சீசன்களும் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில், தற்போது சீசன் 10-ஐயும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்க உள்ளார். இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது சீசனாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பொறுப்பை அவர் ஏற்கிறார்.

ஆனால், அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. எனவே, செப்டம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ள கிராண்ட் லாஞ்ச் நிகழ்ச்சியில்தான் பிக்பாஸ் வீட்டுக்குள் களமிறங்கப்போகும் போட்டியாளர்கள் யார் என்பது தெரியவரும்.

இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள் என்னென்ன திருப்பங்கள் காத்திருக்கின்றன, போட்டியாளர்களுக்கு என்ன மாதிரியான டாஸ்க்குகள் கொடுக்கப்பட உள்ளன, விஜய் சேதுபதி தனது ஸ்டைலில் போட்டியாளர்களை எப்படி கையாளப் போகிறார் என பல எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளன. செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு ஆட்டம் ஆரம்பம்.. பிக்பாஸ் தமிழ் சீசன் 10-க்காக ரசிகர்களும் தயாராகிவிட்டார்கள்!