பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் வாய்ப்பு: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் சலுகையுடன் வாய்ப்பு வழங்குதல்.
பொதுப்பணித் துறை
தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை சார்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
அனுமதிக்கத்தக்க அதிகபட்ச பிரிமியம் FSI முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு பன்னடுக்கு எழில் மிகு மற்றும் உலகத்தரமான கட்டடங்களை அமைத்தல்.
இந்த அறிவிப்பின் மூலம் விலைமதிப்பிட முடியாத அரசு நிலங்கள் சேமிக்கப்பட்டு, அவற்றின் உச்சபட்ச பயன்பாடு உறுதி செய்யப்படும்.
ஒரு கோடி ரூபாய்வரை திட்ட மதிப்புள்ள பொதுப்ப்பணித்துறை ஒப்பந்தங்களில் பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் தகுதிவாய்ந்த பொறியியல் பட்டதாரிகளுக்கு சலுகையுடன் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.
ஒரு கோடி ரூபாய் தொகுப்பு நிதியுடன் தமிழ்நாடு உள் கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் நிறுவுதல்.
இந்தக் கழகம் முன்னணி தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் உலகத் தரத்துடன் அமைக்கப்படும். இதன்மூலம் பெருநகரங்கள், தொழிற்துறை மையங்கள், தொழில்நுட்பப் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப நகரங்கள் மற்றும் வணிகப் பூங்காக்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
பணி முன்னேற்றம், தரக் கட்டுப்பாட்டைக் கண்காணித்தல் மற்றும் வெளிப்படைத் தன்மைக்காக ஒரு செயலி உருவாக்குதல்.
ஒப்பந்ததாரர் பதிவு முறையில் மேலும் எளிமை
பொதுப் பணித்துறையில் ஒப்பந்ததாரர்கள் பதிவு முறையை மேலும் எளிமையாக்குதல்.
அரசு மருத்துவமனைகளின் பராமரிப்புப் பணிகளை நவீனப்படுத்தும் நோக்கில் AI தொழில்நுட்பத்துடன் கட்டட மேலாண்மையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் என தெரிவித்தார்.