📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 01, 2026 01:03 AM

பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!

பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!

முரசொலி தலையங்கம் (31-08-2026)

பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு...!

'சொன்னது எதையும் செய்ய மாட்டேன்' என்று சபதம் எடுத்துள்ளார் முதலமைச்சர் விஜய். கொடுத்த வாக்குறுதிகளை அவர் மறந்து விட்டார். நினைவுக்கு வந்த ஒருசில வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றுகிறார். பொய்யிலே பிறந்த அவரது ஆட்சி பொய்யிலே புரண்டு கொண்டு இருக்கிறது.

'நான் வாக்குறுதி கொடுத்தால் அனைவருக்கும் கொடுப்பேன். தி.மு.க.மாதிரி அதில் அளவுகோல் வைத்து, அவர்களுக்கு கிடையாது, இவர்களுக்கு கிடைக்காது என்று சொல்ல மாட்டேன்' என்று வாய்க்கு வந்த படி உளறினார். தேர்தல் முடிந்து, ஆட்சிக்கு வந்த பிறகு அவர் செய்வது அனைத்தும் முழுமையானது அல்ல. அரைகுறையானது தான்.

* அனைவருக்கும் 6 சிலிண்டர் இலவசம் என்று சொன்னார் விஜய். 'ஒவ்வொரு குடும்பத்துக்கும்' என்று சொன்னார் விஜய். இப்போது 3 சிலிண்டர் தான் தரப்போவதாகச் சொல்கிறார். அதுவும் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே சிலிண்டர் கிடைக்குமாம். அதாவது மாதம் 20 ஆயிரம் ஊதியம் வாங்குகிறவர்களுக்கு மட்டும்தான் 3 சிலிண்டராம். 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டம் என்பது, 'அன்னபூரணி சூப்பர் மூன்று’ ஆகிவிட்டது.

* அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று தேர்தலுக்கு முன்னதாகச் சொன்னார் விஜய். 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மட்டுமே 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று முதலமைச்சர் ஆனதும் அறிவித்திருக்கிறார் விஜய்.

* அனைத்து விவசாயிகளுக்கும் அவர்கள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தேர்தலுக்கு முன்னதாகச் சொன்னார் விஜய். இப்போது அதிலும் அரைகுறையான அறிவிப்பு தான். 50 ஆயிரம் வரை தள்ளுபடி என்றார். அடுத்து 70 ஆயிரம் வரை தள்ளுபடி என்றார்.

* மகளிருக்கு தமிழ்நாடு முழுவதும் கட்டணமில்லாப் பயணம் என்று தேர்தலுக்கு முன்னதாகச் சொன்னார் விஜய். மாநகர, நகரப் பேருந்துகளில் மட்டுமே கட்டணமில்லாப் பயணம் என்று இப்போது அறிவித்துள்ளார்.

* முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் தொகை 5 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயரும் என்று பரபரப்பாக அறிவித்தார். ஆண்டு வருமானம் 1.20 லட்சம் தான் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதாவது குடும்பத்தின் மாத வருமானம் 10 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால்தான் இதில் பங்கெடுக்க முடியும்.

* பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் என்று அறிவித்தார் விஜய். இப்போது அரசாங்க மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும்தான் என்று அறிவித்துள்ளார் விஜய்.