📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 30, 2026 11:04 AM

பரந்தூர் விமானநிலையம்: "வளர்ச்சித் திட்டங்களை தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம்"

பரந்தூர் விமானநிலையம்: "வளர்ச்சித் திட்டங்களை தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம்"

ஒவ்வொரு முறையும் திட்டத்தை ஆரம்ப நிலையிலிருந்தே மீண்டும் வடிவமைக்க தொடங்கும் நிலையை தமிழ்நாடு தாங்கிக்கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

உள்கட்டமைப்பு எதிர்காலம்

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

✈️ பரந்தூர் விமான நிலையம்: ஒப்புதல்கள் பெறப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இத்திட்டம் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் புதிய இடத்தைத் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.

🏟️ உலகளாவிய விளையாட்டு நகரம் (Global Sports City): அடிக்கல் நாட்டப்பட்டு, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, கட்டுமானப் பணிகளைத் தொடங்கத் தயாராக இருந்த நிலையில், இப்போது அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மீண்டும் வடிவமைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

மறுபரிசீலனை

ஒவ்வொரு முறை திட்டத்தை மாற்றியமைப்பதும் கால விரயம், ஒப்பந்தச் சிக்கல்கள், அதிகரிக்கும் செலவுகள் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளில் தாமதம் ஆகியவற்றுக்கே வழிவகுக்கும்.

தேவைக்கு முன்பே திட்டமிட்டு, விரைவாகச் செயல்படுத்தக் கற்றுக்கொண்டதால்தான் தமிழ்நாடு இந்தியாவின் உற்பத்தித் துறையின் மையமாகத் திகழ்கிறது.

அரசியலாக்காதீர்கள்

பெரிய கனவுகளைக் காண்பதும், திட்டங்களை மேம்படுத்துவதும், பிரம்மாண்டமாக உருவாக்குவதும் வரவேற்கத்தக்கதே; ஆனால், ஒவ்வொரு முறையும் திட்டத்தை ஆரம்ப நிலையிலிருந்தே மீண்டும் வடிவமைக்கத் தொடங்கும் நிலையைத் தமிழ்நாடு தாங்கிக்கொள்ள முடியாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.