📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 16, 2026 06:03 AM

பருவமழை முன்னெச்சரிக்கை பணி முதல்வர் விஜய் நேரில் ஆய்வு

பருவமழை முன்னெச்சரிக்கை பணி முதல்வர் விஜய் நேரில் ஆய்வு

சென்னை: சென்னையில், மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க 1,600 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் கால்வாய்கள் கட்டமைக்கப்பட்டு உள்ளன. ஆனாலும், ஒவ்வொரு மழைக்காலத்திலும் வெள்ளத்தில் சிக்கி மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய் நேற்று, அம்பத்துாரில் சிங்கப்பூர் நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்று, தன் சொந்த தொகுதியான பெரம்பூர், வியாசர்பாடி முல்லை நகர் அருகே உள்ள கேப்டன் காட்டன் கால்வாய் துார்வாரும் பணிகளை, பார்வையிட்டார்.

மேலும், பேசின் பாலம் பகுதியில் ஓட்டேரி நல்லான் கால்வாயானது பக்கிங்ஹாம் கால்வாயில் சேரும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல் மண்ணை அகற்றும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

மழைக்காலத்தில் மக்கள் பாதிக்கப்படாத வகையில், வடிகால்களில் உள்ள அடைப்புகளை உடனுக்குடன் நீக்கவும், மீட்பு உபகரணங்கள் மற்றும் உயர் திறன் உடைய பம்புகளைத் தயார் நிலையில் வைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

மேலும், 2005ம் ஆண்டு உட்பட கடந்த காலங்களில் மழை பாதிப்பின்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.