📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 16, 2026 05:03 AM

பூந்தமல்லி மெட்ரோ ரயிலில் பயணித்து சிறப்பு பள்ளி மாணவர்கள் உற்சாகம்

பூந்தமல்லி மெட்ரோ ரயிலில் பயணித்து சிறப்பு பள்ளி மாணவர்கள் உற்சாகம்

பூந்தமல்லி: பூந்தமல்லி த.வெ.க., சார்பில், சிறப்பு பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர், போரூர் வரை மெட்ரோ ரயிலில் அழைத்து செல்லப்பட்டனர். கைகளை தட்டி, மகிழ்ச்சியுடன் அவர்கள் பயணித்தனர்.

பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் வழித்தடத்தின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி – வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. தினமும், ஏராளமானோர் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், பூந்தமல்லியில் உள்ள ‘தொன் குவனெல்லா’ என்ற சிறப்பு பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை, மெட்ரோ ரயிலில் நேற்று முன்தினம் அழைத்து செல்லப்பட்டனர்.

பூந்தமல்லி த.வெ.க., சார்பில், பூந்தமல்லி நகராட்சி முன்னாள் துணை தலைவர் பூவை ரவிகுமார், இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

போரூர் வரை மெட்ரோ ரயிலில் பயணித்த சிறப்பு பள்ளி மாணவர்கள், கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பூந்தமல்லி த.வெ.க., நிர்வாகிகள் விக்னேஷ் பிரசாத், அன்பு, வடிவேலு, சவுகர் உட்பட பலர் பங்கேற்றனர்.