📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 21, 2026 07:01 AM

Rasi Palan Today (21.09.2026): சிம்மத்துக்கு தடங்கல்.. மகரத்துக்கு சிக்கல்.. அப்ப உங்க ராசிக்கு

Rasi Palan Today (21.09.2026): சிம்மத்துக்கு தடங்கல்.. மகரத்துக்கு சிக்கல்.. அப்ப உங்க ராசிக்கு

Rasi Palan Today (21.09.2026): சிம்மத்துக்கு தடங்கல்.. மகரத்துக்கு சிக்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?

Rasi Palan Tamil Today (21.09.2026): கஜலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும் செப்டம்பர் 21ம் தேதியான இன்றைய நாளின் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களைக் காணலாம்.

செப்டம்பர் 21ம் தேதி திங்கட்கிழமையான இன்றைய நாளின் 12 ராசிகளுக்குமான பலன்களைக் காணலாம். வளர்பிறை தசமி திதியுடன் கூடிய இந்நாளில் கஜலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

இன்றைய ராசிபலன்கள் (செப்டம்பர் 21)

வியாபாரம் பணிகளில் லாபங்கள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவுகள் திருப்தியை ஏற்படுத்தும். மனதை குழப்பிய சிந்தனைகளில் இருந்து சுதந்திரமான சூழ்நிலைகள் ஏற்படும். உடற்பயிற்சி விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.

வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை அகலும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கணவன்-மனைவியிடையே நெருக்கம் உண்டாகும். சிறு சிறு மாற்றங்கள் மூலம் லாபகரமான வாய்ப்புகளை ஏற்படுத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பழக்க வழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும். மனை விற்பனையில் சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் பலவிதமான இலக்குகள் பிறக்கும். வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். கணவன்-மனைவியிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும்.

தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். நண்பர்கள் வழியே நல்ல செய்தி வரும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். எதிர்பாலின மக்களுடன் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்திருந்த ஆதாயம் உருவாகும். சேமிப்பு செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பேச்சுவார்த்தைகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும்.

பேச்சுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் மூலம் மேன்மை உண்டாகும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கையும் துணிச்சலும் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்

பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முத்திரை பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். ஆன்மீக எண்ணங்களில் நிபுணத்துவம் வெளிப்படும்.

பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய செயல்களில் அலைச்சல் உண்டாகும். பேச்சுகளில் பொறுமை வேண்டும். உணவு துறைகளில் புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். கால்நடை சார்ந்த செயல்களில் ஆதாயம் ஏற்படும். வாகனத்தில் சிறு சிறு மாற்றங்களைச் செய்வீர்கள்.

வியாபார பயணங்களில் சாதகமான சூழல்கள் அமையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய நினைவுகள் மூலம் சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். துணைவரைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.

மனதிற்கு பிடித்தவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் வந்து செல்லும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். மற்றவர்களின் பணியைச் சேர்ந்து பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாக நிறைவு பெறும். சகோதர வகையில் அனுசரித்து செல்லவும்.

தன வரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுபவம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி