📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 27, 2026 04:03 PM

RTI-ல் சட்டம் - ஒழுங்கு நீக்கம் குறித்த அறிவிப்பு

RTI-ல் சட்டம் - ஒழுங்கு நீக்கம் குறித்த அறிவிப்பு

RTI-ல் சட்டம் - ஒழுங்கு நீக்கம் குறித்த அறிவிப்பு - திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு!

RTI சட்டத்தின் கீழ் சட்டம்-ஒழுங்கு குறித்த தகவல்களைப் பெற முடியாது என அறிவித்த தமிழ்நாடு அரசு, தற்போது அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு குறித்து பதில் பெற முடியாது என்று தவெக அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது.

சட்டம் ஒழுங்கு இன்டலிஜன்ஸ் கீழ் வருவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

அரசின் இந்த அறிவிப்பிற்கு, “சட்டம் & ஒழுங்கு தொடர்பான விவகாரங்களுக்கு தகவல் அறியும் உரிமையிலிருந்து விலக்கு அளிப்பது, அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வைப் பாதிக்கும் நடவடிக்கையாக அமையும்.

மக்களின் உரிமைக்குரல்களும், போராட்டங்களும் ஜனநாயக வழியில் அணுகப்பட வேண்டுமே தவிர, அவற்றை ஒடுக்குவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படக் கூடாது.

சட்டம் & ஒழுங்கு என்ற பெயரில் தகவல்கள் மறைக்கப்படுவது பொதுமக்களின் கேள்வி கேட்கும் உரிமையைப் பலவீனப்படுத்தும்” – நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்,

“‌ ‘வெளிப்படையான அரசு’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, நான்கே மாதங்களில் மக்களைக் கேள்வி கேட்கக்கூடாது என்கிறது.

500க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தும், சட்டம் ஒழுங்கைச் சீர்செய்யத் திறனற்ற அரசு, இப்போது தனது தவறை மறைக்க, சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களையே மக்கள் கேட்க முடியாதபடி RTI உரிமையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது வெட்கக்கேடானது.

இதுதான் மாற்றமா?" – நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி...

என்று எதிர்க்கட்சிகள் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன.

இதையடுத்து தற்போது RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம் குறித்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது தமிழ்நாடு அரசு.