📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 08, 2026 07:04 PM

ஸ்டார்ஹப் மைரிபப்ளிக்கின் கைப்பேசிப் பிரிவை வாங்குகிறது

ஸ்டார்ஹப் மைரிபப்ளிக்கின் கைப்பேசிப் பிரிவை வாங்குகிறது

மைரிபப்ளிக் நிறுவனத்தின் கைப்பேசிப் பிரிவைத் தங்களுக்குக்கீழ் கொண்டுவருவதாக ஸ்டார்ஹப் நிறுவனம் வியாழக்கிழமை (அக்டோபர் 8) தெரிவித்தது.

அந்தப் பரிவர்த்தனையின் மதிப்பு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அதன் விலை, மைரிபப்ளிக்கின் ஒட்டுமொத்த 4ஜி, 5ஜி சேவைப் பயனர்கள், அவர்களில் சராசரியாக ஒவ்வொரு பயனரிடமிருந்தும் ஈட்டப்படும் வருவாய் போன்ற அம்சங்களைக் கொண்டு தீர்மானிக்கப்படும்.

வரும் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதிக்குள் பரிவர்த்தனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு, பரிவர்த்தனையையும் தாண்டி 25,000 பயனர்கள் மைரிபப்ளிக்கின் கட்டமைப்பிலிருந்து மாறும்போது ஸ்டார்ஹப் போனஸ் தொகையாக ஒரு மில்லியன் வெள்ளியைச் செலுத்தும். அதேபோல், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதிக்குள் 50,000 பயனர்கள் மாறும்போது மேலும் ஒரு மில்லியன் வெள்ளித் தொகை செலுத்தப்படும்.

கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி வரையிலான ஓராண்டு காலத்தில் மைரிபப்ளிக்கின் கைப்பேசி வர்த்தகம் ஒட்டுமொத்தமாக 2.4 மில்லியன் வெள்ளி லாபம் பார்த்தது.

இந்தப் பரிவர்த்தனையால் மைரிபப்ளிக்கின் கைபேசிச் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அவர்கள் கட்டங்கட்டமாக ஸ்டார்ஹப்பின் கட்டமைப்புக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

சிங்கப்பூரின் தொலைத் தொடர்பு நிறுவனங்களை ஒன்றுசேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.