Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (25-08-2026) எங்கெல்லாம் மின் தடை?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (25-08-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Tamil Nadu Power Shutdown (25-08-2026): தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 25 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை காலை 9 மணி முதல் பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
கோவை மாவட்டம்
சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை (சில பகுதிகள்), பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம், ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பேத்தம்பட்டி, அணிக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.புரம், எஸ்.ஜி.புதூர், இலுப்பநகரம், சிக்கணூத்து, அமந்தக்கடவு, லிங்கனை.
கடலூர் மாவட்டம்
பண்ருட்டி ரூரல், கண்டரக்கோட்டை, தட்டம்பாளையம், கோழிப்பாக்கம், அண்ணாகிராமம், அரசப்பாளையம், புதுப்பேட்டை, திருவாமூர், பெரியாக்குறிச்சி, ஓலையூர், விழுதுடையான்.
நாகப்பட்டினம் மாவட்டம்
குத்தாலம், சோழம்பேட்டை, முருகமங்கலம், சேத்திரபாலபுரம், ஆலங்குடி, குத்தாலம் நகரம் பகுதி 1 & 2, அரையபுரம், மாதிரிமங்கலம், திருக்குவளை, தேவூர், சாத்தியக்குடி, மேலப்பிடாகை, தலைஞாயிறு, மணலி, கொளப்பாடு, கச்சனம்.
தஞ்சாவூர் மாவட்டம்
சாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள், ஒரத்தநாடு நகரம், திருநாகேஸ்வரம், திருநீலக்குடி.
புதுக்கோட்டை மாவட்டம்
பழைய கந்தர்வக்கோட்டை, புதுப்பட்டி மற்றும் கந்தர்வக்கோட்டை நகர் முழுப் பகுதி, மங்களக்கோவில் முழுப் பகுதி.
தேனி மாவட்டம்
தப்புக்குண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
விருதுநகர் மாவட்டம்
கண்ணா நகர், கணேசன் காலனி, நேரு ரோடு, பராசக்தி காலனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள், நாரணாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், பள்ளபட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், நாரணாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி