Politics
September 28, 2026 10:03 AM
த.வெ.க., தீய கட்சி: பழனிசாமி ஆவேசம்
சென்னை: இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரம் தொகுதியில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனி சாமி பேசியதாவது:
ஒட்டுமொத்த அ.தி. மு.க.,வும் படிப்படியாக த.வெ.க.,விற்கு வந்து விடும் என்கின்றனர்; அது கனவில் கூட நடக்காது. அ.தி.மு.க., தான் த.வெ.க.,வை வீழ்த்தும்.
த.வெ.க., ஆட்சியை காப்பாற்ற, எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கும் வெட்கக்கேடான செயலை முதல்வர் விஜய் செய்கிறார்.
த.வெ.க., தான் தீய கட்சி. த.வெ.க.,வின் குதிரை பேரத்தில் சத்யபாமா விலை போனதால்தான், இங்கு இடைத்தேர்தலே நடக்கிறது. மக்களின் ஓட்டை விற்ற சத்யபாமாவுக்கு, மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
அ.தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போட்டு வருகின்றனர். எத்தனை பொய் வழக்கு போட்டாலும், அ.தி.மு.க.,வின் வெற்றியை தடுக்க முடியாது. இவ்வாறு பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
Politics