📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 30, 2026 02:03 AM

தாராபுரத்தில் விஜய் மெழுகுச் சிலையுடன் வாக்கு சேகரிப்பு

தாராபுரத்தில் விஜய் மெழுகுச் சிலையுடன் வாக்கு சேகரிப்பு

தாராபுரம் தொகுதியில் விஜய்யின் மெழுகுச் சிலையை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் சத்யபாமா.

தாராபுரம்: ​தா​ராபுரம் தொகுதி தவெக வேட்​பாளர் சத்​ய​பா​மா, முதல்​வர் விஜய்​யின் மெழுகுச்​சிலை​யுடன் சென்று பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கிறார்.

தாராபுரம் தொகு​திக்கு உட்​பட்ட மூலனூர் ஒன்​றி​யம் அண்​ணாநகர், வேன் ஸ்டாண்ட், கடைவீ​தி, பேருந்து நிறுத்​தம், பெரி​யார் நகர் உள்​ளிட்ட 20-க்​கும் மேற்பட்ட பகு​தி​களில் நேற்று தவெக வேட்​பாளர் சத்​ய​பாமா வாக​னப் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார்.

அப்​போது, தனது பிரச்​சார வாக​னத்​தின் முகப்​பில் முதல்​வர் விஜய்​யின் தத்​ரூப​மான மெழுகுச் சிலையை வைத்​த​படி மக்​களைச் சந்​தித்து வாக்கு சேகரித்​தார். மெழுகுச் சிலையை பொது​மக்​கள் பலர் ஆர்​வ​முடன் வந்து பார்​வை​யிட்​டனர்.

அப்​போது பேசிய சத்​ய​பா​மா, “இங்கே உங்​களுக்​காக நின்​று​கொண்​டிருப்​பது நம்ம விஜய் அண்​ணன் தான். எனக்கு நீங்​கள் அளிக்​கும் ஒவ்​வொரு வாக்​கும்,

நேரடி​யாக நம்ம விஜய்க்கு அளிக்​கும் வாக்​குக்​குச் சமம். இத்​தொகு​தி​யில் நான் வெற்றி பெற்​றால், தாராபுரம் சட்​டப்​பேரவை தொகு​தி​யைச் சோலை​வன​மாக மாற்​று​வதற்​குத் தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளை​யும் உறு​தி​யாக மேற்​கொள்​வேன்” என வாக்​குறுதி அளித்​தார்.

இரட்டை இலைக்கு... ​இதனிடையே தா​ராபுரம் மூலனூர் பகு​தி​யில் முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் வாக்கு சேகரித்தார். அப்​போது, பழக்கதோஷம் காரண​மாக ‘இரட்டை இலை’ சின்​னத்​துக்கு வாக்​களிக்​கு​மாறு கோரினார். இதனைக் கேட்டு வேட்​பாளர், தவெக​வினர் சிரித்​தனர். உடனடி​யாகத் தனது தவறை திருத்தி ‘விசில்’ சின்​னத்​தில்​ ​வாக்​களிக்​க கோரி​னார்​.