📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 26, 2026 08:04 AM

திமுகவின் 110 புதிய மாவட்டங்கள் பட்டியல் தயார்: விரைவில் வெளியிட கட்சித் தலைமை திட்டம்

திமுகவின் 110 புதிய மாவட்டங்கள் பட்டியல் தயார்: விரைவில் வெளியிட கட்சித் தலைமை திட்டம்

சென்னை: சமீபத்​தில் செயற்​குழு கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானத்​தின் அடிப்​படை​யில் 110 மாவட்​டங்​கள் எது என்​பது குறித்த பட்​டியலை விரை​வில் வெளி​யிடதி​முக தலைமை முடிவு செய்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

நடந்து முடிந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் தி​முக தோல்​வியைத் தழு​வியதை அடுத்​து, உண்மை கண்​டறி​யும் குழு அமைக்​கப்​பட்​டது. அக்​குழு அளித்த அறிக்​கை​யின் அடிப்​படை​யில் சமீபத்​தில் செயற்​குழு கூட்​டம் கூட்​டப்​பட்டு ஒன்​பது தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

அதில் ‘தி​முக மாவட்​டங்​களின் எண்​ணிக்கை 110-ஆக அதி​கரிக்​கப்​படும்’ என்​பது உள்​ளிட்ட தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. இந்​நிலை​யில் தற்​போது கட்சி தலைமை விரை​வில் 110 மாவட்​டங்​கள் பட்​டியலை வெளி​யிட தீவிர​மாகி வரு​வ​தாக தகவல் வெளி​யாகி​யிருக்​கிறது.

இதுகுறித்து அறி​வாலய வட்​டாரங்​கள் கூறிய​தாவது: செயற்​குழு கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​களின் அடிப்​படை​யில் 110 மாவட்​டங்​கள் குறித்த பட்​டியல் தயாரித்து முடிக்​கப்​பட்​டு​விட்​டது. உட்​கட்​சித் தேர்​தல் அடிப்​படை​யில் தான் அங்​கெல்​லாம் புதிய நிர்​வாகி​கள் நியமனம் செய்​யப்​படு​வார்​கள். இதற்கு வசதி​யாக முதற்​கட்​ட​மாக ஒவ்​வொரு மாவட்​டத்​துக்​கும் ஒரு பொறுப்​பாளர் வீதம் புதிய பட்​டியல் தயாரிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், ‘இப்​படி பொறுப்​பாளர்​கள் நியமனம் நடந்​தால், அவர்​கள் அடுத்து வரும் உட்​கட்சி தேர்​தலில் மீண்​டும் வெற்​றி​பெறு​வதற்​கான பணி​களை முடுக்​கி​விடு​வார்​கள்; அப்​போது உட்​கட்சி தேர்​தல் ஜனநாயக ரீதி​யிலும் நியாய​மான முறை​யிலும் நடப்​ப​தில் சிக்​கல் ஏற்​படும்’ என கட்​சித் தலை​மைக்கு மூத்த நிர்​வாகி​கள் ஆலோ​சனை தெரி​வித்​தனர்.

இதனை ஏற்​றுக் கொண்ட கட்​சித் தலை​வர் மு.க. ஸ்டா​லின், தற்​போது பொறுப்​பாளர்​கள் பட்​டியலை அறிவிக்​கும் முடி​வைத் தள்ளி வைத்​துள்​ளார். இதனாலேயே பொறுப்​பாளர்​கள் அறி​விப்​பில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. இதனைத் தொடர்ந்​து, விரை​வில் 110 மாவட்​டங்​கள் குறித்த அதி​காரப்​பூர்வ பட்​டியலை கட்​சித் தலைமை வெளி​யிடும். இவ்​வாறு அவர்​கள்​ தெரிவித்​தனர்​.