திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி.. 5 நாள் டார்கெட்.. சர்தார் 2 vs மண்டாடி.. டிக்கெட் புக்கிங் எப்படி?
சென்னை: கார்த்தி நடித்துள்ள சர்தார் 2 படமும் சூரி நடித்துள்ள மண்டாடி திரைப்படமும் நாளை வியாழக்கிழமை நேரடியாக திரையரங்குகளில் மோத காத்திருக்கின்றன. தீபாவளி, பொங்கல் விடுமுறையை போல தொடர்ந்து முதல் வாரம் 5 நாட்கள் ஓபனிங்கை கருத்தில் கொண்டு இரண்டு படங்களும் வெளியாக உள்ளன.
சூர்யா தம்பி கார்த்தியுடன் சூரி மோதுவதே சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் ஏற்கனவே வெளியாகி வெற்றியை பார்த்த சர்தார் படத்தின் 2வது பாகம் வெளியாகிறது.
இன்னொரு பக்கம் சூரியை வைத்து பெரும் பட்ஜெட்டில் படகு போட்டி கதையை வைத்து முற்றிலும் ரிஸ்க்கான படமாக உருவாகியுள்ள மண்டாடி வெளியாக உள்ளது. இந்த 2 படங்களுமே வெற்றி பெற வேண்டும் என்பதை தாண்டி ரசிகர்களை என்டர்டெயின் செய்ய வேண்டும் என்பது தான் முக்கியம்.
5 நாள் டார்கெட்: வியாழக்கிழமையான செப்டம்பர் 10ம் தேதியே சர்தார் 2 மற்றும் மண்டாடி உள்ளிட்ட படங்கள் திரைக்கு வருகின்றன. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி விடுமுறையான திங்கட்கிழமை என தொடர்ந்து 5 நாட்களை டார்கெட் செய்து இந்த 2 படங்களும் நாளை வெளியாக காத்திருக்கின்றன. வியாழன், வெள்ளி விடுமுறை இல்லாத நிலையில், 2 படங்களுக்கான டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கும் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
சர்தார் 2 டிக்கெட் புக்கிங் நிலை: கடந்த ஞாயிற்றுக்கிழமையே பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன் நடிப்பில் உருவான சர்தார் 2 படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியது. பிவிஆர் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஒரு சில காட்சிகள் ஆரஞ்சு நிறத்தில் புக்கிங் காட்டுகிறது. ஆனால், பல காட்சிகளில் வழக்கம் போல பச்சை வண்ணத்திலேயே பல்லிளிக்கிறது.
கம்பேக் கொடுப்பாரா கார்த்தி?: அண்ணன் சூர்யா பல வருடங்கள் கழித்து இந்த வாரம் பேக் டு பேக் 2 பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்களை கொடுத்து தப்பித்து விட்டார். இந்த ஆண்டு வா வாத்தியார் படத்தின் மூலம் பயங்கர அடி வாங்கிய தம்பி கார்த்தி சர்தார் 2 படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். என்ன ஆகிறது என்பது நாளை முதல் ஷோ முடிந்ததும் தெரிந்து விடும்.
மண்டாடி டிக்கெட் புக்கிங்: கார்த்தியின் சர்தார் 2 படத்தை விட சூரியின் மண்டாடி படத்துக்கு சற்று கூடுதலான டிக்கெட் புக்கிங் புக் மை ஷோ உள்ளிட்ட டிக்கெட் புக்கிங் நிறுவனத்தின் டிராக்குகள் மூலம் பார்க்க முடிகிறது. தொடர்ந்து சூரி நடித்த கருடன், மாமன் படங்கள் வெற்றியடைந்த நிலையில், மண்டாடி படத்தை சென்னையை தாண்டி மற்ற மாவட்டங்களிலும் கண்டு ரசிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.