📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 03, 2026 06:04 PM

திரையில் ஹீரோ; தரையில் ஜீரோ விஜய் மீது ஆர்பி உதயகுமார் தாக்கு

திரையில் ஹீரோ; தரையில் ஜீரோ விஜய் மீது ஆர்பி உதயகுமார் தாக்கு

திரையில் ஹீரோ; தரையில் ஜீரோ விஜய் மீது ஆர்பி உதயகுமார் தாக்கு

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: மதுராந்தகம், தாராபுரம் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்த பச்சைத் துரோகத்தால் தற்போது இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தமிழ்நாட்டு வாக்காளர்களை விஜய் குறைத்து மதிப்பிட்டிருக்கிறார்.

மக்கள் தீர்ப்பே; மகேசன் தீர்ப்பு என்பது வலிமையானது. திரையில் ஹீரோவாக வலம் வந்த முதல்வர் விஜய், தற்போது தரையில் ஜீரோவாக தடுமாறிக் கொண்டிருக்கிறார். தவெக வேட்பாளர்கள், அமைச்சர்கள் பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் வாக்காளர்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகின்றனர். இன்றைக்கு தவெகவில் துரோகத்தின் அடையாளமாக களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் மட்டும் அல்ல, அவர்களை ஆதரித்துச் செல்லும் அமைச்சர்களும் மக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்து வருகின்றனர்.

வாக்காளர்கள் தெளிவாக இருப்பதற்கு இந்த காட்சிகளே சாட்சி. விஜய்யின் ரீல் தற்போது அறுந்துபோய்விட்டது. இரு தொகுதிகளின் தோல்வி பயத்தில் விஜய் 39 ஊர்களில் ரோடு ஷோ சென்றுள்ளார். விஜய் 5 நிமிடம் வந்தாலே போதும் அவரின் கவர்ச்சி எங்களுக்கு வெற்றியைத் தரும் என்று ஒரு மாயபிம்பத்தை கட்டமைத்து வந்தனர்.

ஆனால், களநிலவரம் ஆசை அறுபது நாள், மோகம் 30 நாள் என்பதாக, ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு என்பதாக மக்கள் உரத்த குரலில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தவெக வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் கவிழ்ந்து போவார்கள் என்ற உளவுத்துறை அறிக்கையும் விஜய்க்கு அதிர்ச்சி தந்திருக்கிறது. துரோகம் ஒரு நாளும் வெல்லாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.