📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 10, 2026 07:33 PM

Thirumavalavan Statement : ‘தளபதி ஸ்டாலின் என்ற திருமா’ விஜய் பெயரையே குறிப்பிடாமல் அறிக்கை..!

Thirumavalavan Statement : ‘தளபதி ஸ்டாலின் என்ற திருமா’ விஜய் பெயரையே குறிப்பிடாமல் அறிக்கை..!

Thirumavalavan Statement : ‘தளபதி ஸ்டாலின் என்ற திருமா’ விஜய் பெயரையே குறிப்பிடாமல் அறிக்கை..!

'தளபதி என்ற பட்டத்தை முதல்வர் விஜயும் திரைப்படங்களில் இருந்து தன் பெயருக்கு முன்னால் போட்டு வரும் நிலையில், மு.க.ஸ்டாலினை தளபதி என்றும் விஜயின் பெயரை கூட சொல்லாமலும் அறிக்கை கொடுத்திருக்கிறார் திருமா’

மிசா காலக்கட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியதும் அவர் செய்த சைகையும் பெரும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கின்றன. ஆட்சியை ஆதரிக்கும் இடதுசாரிகள் கூட முதல்வரின் செய்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை குறிப்பிடாமல் முதல்வர் விஜய் பேசிய பேச்சும், அவர் செய்த சைகையும் ஆட்சியில் பங்கெடுத்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலமைச்சரின் உடல்மொழி: "மனித மாண்புகளுக்கு எதிரானது"https://t.co/LRXU10pMDY| #Thirumavalavan #VCK #CMVijay #TNNews #ABPNADU pic.twitter.com/luswiJTmfW

பற்ற வைத்த சிந்தனை செல்வன்

இது தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்திருந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் அதில் ‘அநீதிகள் அரங்கேறும்போதும் அமைதி காக்கும் அறிவாளிகளின் மவுனம் கொடூரமானது’ என குறிப்பிட்டிருந்தார். அவர் யார் பெயரையும், சம்பவத்தையும் தன்னுடைய சமூக வலைதள பதிவில் குறிப்பிடவில்லையென்றாலும், முதல்வர் விஜய் மிசா சம்பவம் பற்றி பேசியதையும், அதற்கு எதிர்வினையாற்றாமல் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவனையுமே மறைமுகமாக குறிப்பிட்டு சிந்தனைசெல்வன் விமர்சித்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் உள்ளவர்கள் பேசத் தொடங்கினர்.

“அக்கிரமங்களை அரங்கேற்றும் அநீதியாளனை விட, அது அக்கிரமம் அநீதி என்று அறிந்தே அமைதி காக்கும் அறிவாளிகளின் மவுனம் கொடூரமானது.” pic.twitter.com/wvep67ESaa

விஜய் பெயரே இல்லாமல் அறிக்கை கொடுத்த திருமா

இந்நிலையில், முதல்வர் விஜயின் செய்கைக்கு கண்டனம் தெரிவித்து திடீர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் திருமாவளவன். அதில், முதல்வரின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானதாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள திருமாவளவன், இது நாகரிகம் ஆகாது என்றும் விமர்சித்திருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய அந்த அறிக்கையில் எங்கேயும் விஜய் என்ற பெயரை அவர் பயன்படுத்தவே இல்லை. மாறாக, முதல்வர் என்ற வார்த்தையை மட்டுமே அவர் பயன்படுத்தியிருக்கிறார். அதோடு, சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பெயரையும் குறிப்பிடாமல் அவர் பேசியது வரலாற்று பிழை என்றும் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் திருமாவளவன்.

மு.க.ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு தளபதி என்ற திருமா

ஆனால், அதே அறிக்கையில் விஜய் பெயரை குறிப்பிடாத திருமாவளவன், மு.க.ஸ்டாலின் பெயரை மட்டும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு எழுதிருக்கிறார். அதோடு, அவரை தளபதி எனவும் அடைமொழியிட்டு அந்த அறிக்கையில் திருமாவளவன் மு.க.ஸ்டாலினுக்கு ஆதராகவே பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. முதல்வர் விஜயும் தன்னுடைய பெயருக்கு முன்னர் ’தளபதி’ என திரைத்துறையில் இருந்து, தொடர்ந்து போட்டுவரும் நிலையில், மு.க.ஸ்டாலின் பெயருக்கு முன்னாள் மட்டும் ‘தளபதி’ என திருமாவளவன் போட்டு, அறிக்கை வெளியிட்டிருப்பதன் மூலம், அரசியலில் ஒரே தளபதி மு.க.ஸ்டாலின் தான், என்று சொல்லாமல் சொல்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

அறிக்கையில் இருப்பது என்ன ?

அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்படி பார்த்தால், காவல்துறை மானியத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதல்வருமான தளபதி ஸ்டாலின் அவர்களைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் தரப்பில் 'அது உள்நோக்கம் கொண்டதல்ல' என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. எனினும், இதுபோன்ற 'உடல்மொழிகள்' கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி