📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 10, 2026 10:00 AM

தமிழ் என்றால் கெத்து, பவர்.. தமிழ்த்தாய் வாழ்த்து மீதான தீர்மானத்தில் முதல்வர் விஜய் பேச்சு

தமிழ் என்றால் கெத்து, பவர்.. தமிழ்த்தாய் வாழ்த்து மீதான தீர்மானத்தில் முதல்வர் விஜய் பேச்சு

இன்று (ஆகஸ்ட் 10) தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப் படுகிறது.

முதலாவதாக இந்த தீர்மானத்தின் மீது முதல்வர் விஜய் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது,

மொழி எப்போதும் தொடர்புக்கான ஒன்றே. அதை யாரும் மறுக்க முடியாது. உலகில் உள்ள எல்லா மொழிக்கும் இது பொருந்தும். ஆனால் தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல. பேசினால் வரும் ஓசை மட்டுமல்ல. அது நமது உயிர். நமது உணர்வு.

நம்மை பெற்ற தாயை அம்மா என்று சொல்லும்போது பாசம் நேசம் எல்லாமும் நமக்குள்ள உணர்வாக தோன்றுவதுபோல தமிழும் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. தாய் எப்படியோ அதுபோல தான் தாய் மொழியும்.

அதிலும் நம் தாய் நமக்கு மிகப்பெரிய புனிதம் என்றால் நம் எல்லாருக்குமான தமிழ்த்தாய் பற்றி சொல்லவா வேண்டும். தாயை போற்றுகிற வாழ்த்துகிற தமிழ்த்தாய் வாழ்த்தை எப்படி விடும். விடாது. விடவும் மாட்டோம். நமது தமிழ்த்தாய் வாழ்த்து 1891 இல் எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் நம் தமிழ் மொழியை தமிழ்த்தாய் என்று உயர்வாக பாடினார்.

இந்திய துணை கண்டதை இந்திய ஒன்றியதை அழகிய முகமாக கூறிய சுந்தரனார் அந்த முகத்தோட நெத்தியில் வைக்கிற திலகம் தான் தமிழ்நாடு என்றார். இந்தியாவோட நெற்றியில் இருக்குற போட்டு மாதிரி ஒரு வெற்றி பொட்டு தான் தமிழ்நாடு. அதன் நறுமணம் உலகம் முழுவதும் பரவுவதுபோல தமிழோட புகழும் உலகம் முழுக்க பரவ வேண்டும் என்றார்.

இன்று தமிழ் பேசும் மக்கள் இல்லாத நாடுகளே குறைவுதான். தமிழும் தமிழனும் இல்லாத நாடு எது. தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல அது ஒரு பண்பாடு. அது ஒரு சிந்தனை, அது ஒரு அன்பு. தமிழ் என்றால் விருந்தொம்பல். சுருக்கமாக தமிழ் என்றால் கெத்து. தமிழ் என்றால் பவர்.

அந்த தமிழோட புகழை கூறும் தமிழ்த்தாய் வாழ்த்தில் அனைத்துலகும் இன்பமுற என்று சொல்லி உலகத்தையே நம் தமிழ் உயர்த்தி பிடிக்கிறதே எந்த மொழி, மதம், இனத்தையும், எந்த தனி மனிதனையும் தாழ்த்தி பேசவில்லை. கொஞ்சமும் காயப்படுத்தவில்லை.