📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 06, 2026 10:01 AM

தமிழக இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்

தமிழக இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்

தமிழக இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்

’எதிரும் புதிரும்’ படத்தில் இடம்பெற்ற ’தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ ’திருப்பாச்சி’ படத்தில் ’அப்பன் பண்ண’, இட்லி கடை படத்தில் இடம்பெற்ற ’எத்தன சாமி’ உள்ளிட்ட பாடல்களை புஷ்பவனம் குப்புசாமி பாடியுள்ளார்.

Published : October 6, 2026 at 8:15 AM IST

சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் தலைவராக பிரபல நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற இசைத் துறையில் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் புஷ்பவனம் குப்புசாமி, நாட்டுப்புறப் பாடகர் மட்டுமின்றி திரைப்படப் பின்னணிப் பாடகர், பாடலாசிரியராக பணியாற்றி வருகிறார்.

’எதிரும் புதிரும்’ படத்தில் இடம்பெற்ற ’தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’, ’பேரழகன்’ படத்தில் இடம்பெற்ற ’காதலுக்கு பள்ளிக்கூடம்’, ’திருப்பாச்சி’ படத்தில் ’அப்பன் பண்ண’, இட்லி கடை படத்தில் இடம்பெற்ற ’எத்தன சாமி’ உள்ளிட்ட பல சினிமா பாடல்களை பாடி பெயர் பெற்றுள்ளார்.

மேலும், நாட்டுப்புற பாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள் மற்றும் நாட்டுப்புறக் கலை வடிவங்களைப் பாதுகாத்து வளர்ப்பதுடன், கலைஞர்களை ஊக்குவிக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் மற்றும் அரசு சார்ந்த அங்கீகாரங்களை வழங்குதல், கலை சார்ந்த படைப்புகள் மற்றும் ஆய்வுகளை வெளியிடுதல், நாட்டுப்புறக் கலைகளை ஆவணப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளிலும் மன்றம் ஈடுபட்டு வருகிறது. இதுவரை இந்த மன்றத்தின் தலைவராக திரைப்படக் கலைஞர் வாகை சந்திரசேகர் பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ நியமன ஆணை வெளியாகவுள்ள நிலையில், பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்து புஷ்பவனம் குப்புசாமி வாழ்த்து பெற்றார். இந்த புதிய பொறுப்பில், தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கலைகளின் வளர்ச்சிக்கும், கலைஞர்களின் நலனுக்கும் புஷ்பவனம் குப்புசாமி முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு வாழ்த்து.! தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மக்கள் இசை பாணர் முனைவர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முத்தமிழிலும் வல்லமை பெற்ற முனைவர் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் இயல், இசை, நாடக மன்றத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க வாழ்த்துகள்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் புஷ்பவனம் குப்புசாமிக்கு வாழ்த்து. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மக்கள் இசை பாணர் முனைவர் புஷ்பவனம் குப்புசாமிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முத்தமிழிலும் வல்லமை பெற்ற முனைவர் புஷ்பவனம் குப்புசாமி இயல், இசை, நாடக மன்றத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.