📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 27, 2026 08:03 PM

தமிழகக் கோயில்களின் அறியப்படாத 12 அதிசயங்களும் ஆன்மீக ரகசியங்களும்!

தமிழகக் கோயில்களின் அறியப்படாத 12 அதிசயங்களும் ஆன்மீக ரகசியங்களும்!

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

கோயில் அதிசயங்கள்:

* விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டத்தில் உள்ள நடுச்சத்திரம் காசி விஸ்வநாதர் கோயிலில் சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இதுபோல ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளி இருப்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.

* திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயில் மண்டபத்தில், ஆறு அடி உயரத்தில், நின்ற கோலத்தில், அபய முத்திரையுடன் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.

* காஞ்சி கையிலாயநாதர் ஆலய கருவறையைச் சுற்றி, மார்பாலேயே ஊர்ந்து செல்லும்படியாக ஒரு பிரகாரம் அமைந்துள்ளது. இதனை அவ்விதம் வலம் வருபவர் களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம். இதனை 'சொர்க்கப் பிரதட்சணம்' என்று கூறுவர்.

* மயிலாடுதுறை அருகில் உள்ள அம்பர் மாகாளம் கோவிலில் நந்தி தேவர் மனித உருவில் காட்சி தருகிறார்.

* ஊத்துக்கோட்டைக்கு அருகே உள்ள நாகலாபுரத்தில் எழுந்தருளும் ஸ்ரீ வேத நாராயணப் பெருமாள், தலையில் இருந்து இடுப்பு வரை மனித உருவத்துடனும், இடுப்புக்கு கீழே மீன் வடிவத்துடன் மச்சாவதாரத்தில் காட்சி அளிக்கிறார்.

* பொதுவாக பெருமாள் கோயில்களில் நவகிரக சந்நிதி இருக்காது. ஆனால் தர்மபுரி அருகே உள்ள பாப்பாரப்பட்டியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில், பெண் வடிவில் நவகிரகங்கள் காட்சியளிக்கின்றனர்.

* குரு பகவான் எல்லா கோவில்களிலும் ஆண் வடிவில் தான் காட்சி அளக்கிறார்‌. ஆனால் தில்லை காளி கோவிலில் மட்டும் தட்சிணாயினி என்ற நாமத்துடன் பெண் வடிவில் அருள்பாலிக்கிறார். இவரை வியாழக்கிழமைகளில் வணங்கினால் சகல சௌபாக்கியங்களையும் அருள்தாக நம்பப்படுகிறது.

* அரியலூருக்கும் தஞ்சாவூருக்கும் இடையில் உள்ள திருமழபாடியில் ஒவ்வொரு வருடமும் நந்திக்கு கல்யாணம் நடைபெறுகிறது. திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும் இந்த நந்தி கல்யாணத்தில் கலந்து கொண்டால், அடுத்த வருடம் நந்தி கல்யாணம் வருவதற்குள் இவர்களுக்கு திருமணம் ஆகி விடுமாம். 'நந்தி கல்யாணம் கண்டால் முந்தி கல்யாணம்' என்று பழமொழி வழங்கப்படுகிறது.

* எல்லா சிவன் கோவில்களிலும் இறைவனை எதிர்ப்புறம்தான் நந்திதேவர் இருப்பார். இதற்கு விதிவிலக்காக சில சிவ தலங்களில் மட்டும் இறைவனுக்கு பின்புறம் காட்டி, அதாவது வாசலை பார்த்தபடி நந்தி தேவர் அமர்ந்துள்ளார். அந்த தலங்கள்: திருவத்திபுரம், செய்யாறு, திருவலம், பெண்ணாகரம் மற்றும் திருமுல்லைவாயில் ஆகியன ஆகும்.

* கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள துர்கா தேவிக்கு 18 கைகள் உண்டு. முதலாம் ராஜேந்திர சோழன் மேலைச் சாளுக்கிய அரசனை வென்று, வெற்றி சின்னமாக கொண்டு வந்த சிலை இது. இந்த துர்க்கையின் 16 கைகளில் போர் ஆயுதங்களும், மற்ற இரண்டு கைகளில் ஒன்றில் அபையஸ்தம், மற்றொன்றில் வரத ஹஸ்தம் ஆகியன உள்ளன.

* தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில், மூன்று தலையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருகிறார். இவருக்கு எட்டு கைகள் உள்ளன. வலது பக்கம் ஆண் உருவம், இடது பக்கம் பெண் உருவம், நடுவில் உள்ள முகம் சரஸ்வதி, லட்சுமி, சக்தி இணைந்து இருக்கும்.

* தஞ்சை மாவட்டம் ஐயன்பேட்டையில் உள்ள சுவாமியின் பெயர் செட்டியப்பர். அம்பாளின் பெயர் படி அளந்த நாயகி. இங்கு உற்சவமூர்த்தி கையில் தராசு பிடித்துக் கொண்டும், அம்பாள் படியை பிடித்துக் கொண்டும் காட்சி தருகிறார்கள். புதிதாக வியாபாரம், தொழில் தொடங்குபவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து, வேண்டிக்கொள்கிறார்கள்.

* சிருங்கேரியில் உள்ள ஒரு மண்டபத்தில் ஒவ்வொரு மாதப் பிறப்பன்றும் ஒவ்வொரு தூண்களில் சூரிய ஒளி படுமாறு கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாட்களிலும், ஒவ்வொரு தூணில் சூரியஒளிபடுகிறது.