📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 14, 2026 12:04 PM

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,440 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,440 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,440 குறைவு - வெள்ளியும் கிலோ ரூ. 5,000 குறைந்து விற்பனை

வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் குறைந்து ரூ. 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Published : August 14, 2026 at 10:42 AM IST

சென்னை: ஆபரண தங்கம் 22 காரட்டின் விலை இன்று சவரனுக்கு ரூ. 1,440 குறைந்து ரூ. 1,12,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த தொடர்ந்து அதிகரித்து நகை வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியளித்து வந்த நிலையில், இன்று குறைந்து சற்று ஆறுதலளித்திருக்கிறது. சர்வதேச அளவில் தங்கம் விலை பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கடந்த வாரம் வரை அமெரிக்க டாலர் மிகவும் வலுவாக இருந்ததால், முதலீட்டாளர்கள் அதிக லாபம் தருகிற மற்ற முதலீடுகளின் மீது கவனம் செலுத்தி வந்தனர்.

மேலும் இன்னும் ஒரு சில வாரங்களில் அமெரிக்க ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு வேலைவாய்ப்பின்மை காரணமாக தற்போதைக்கு வட்டி விகிதம் உயர வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

இன்று (ஆகஸ்ட் 14) வெள்ளிக்கிழமை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்#goldrate | #goldprice| #silverrate | #goldsilverrate | #goldrateupdate | #EtvBharatTamilNadu pic.twitter.com/xt3M97l9eO

இதனால் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிற தங்கத்தின் மீது உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. இது உலகளவிலான தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பொதுவாக உலகளவில் தங்கம் விலை உயரும்போது, அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்கிற இந்தியாவிலும் தங்கம் விலை உயர்வது சகஜம் தான்.

நேற்று (ஆகஸ்ட் 13) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 14,220-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 180 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,13,760-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 1,440 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,12,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 14,040

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,12,320

வெள்ளி ஒரு கிராம் - ரூ. 255

வெள்ளி ஒரு கிலோ - ரூ. 2,55,000

கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை

வெள்ளி விலையானது ஆக்ஸ்ட் 11 அன்று கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ரூ. 260-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விலை மாற்றமின்றி அதே விலையில் விற்பனையானது.

இந்நிலையில் இன்று கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இன்று கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளியானது ரூ. 2,55,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.