📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 16, 2026 05:03 AM

தங்கம் விலை மேலும் உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை மேலும் உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.

காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது. நேற்று மாலையில் சவரனுக்கு ரூ.1,280-ம், கிராமுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும், ஒரு கிராம் ரூ.14,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.