📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 26, 2026 03:01 PM

Toxic Public Review: கதையே இல்ல.. டயலாக்கும் புரியல.. டாக்ஸிக் பப்ளிக் ரிவ்யூ!

Toxic Public Review: கதையே இல்ல.. டயலாக்கும் புரியல.. டாக்ஸிக் பப்ளிக் ரிவ்யூ!

சென்னை: நடிகர் யாஷின் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாகி இருக்கும் டாக்ஸிக் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும், இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி,ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் என ஐந்து ஹீரோயின்கள் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் இன்று வெளியாகி இருக்கும் இப்படம் குறித்து பொதுமக்களின் விமர்சனத்தை பார்க்கலாம்.

கதையே இல்ல: டாக்ஸிக் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர் ஒருவர், மோசமான படம். கதையே இல்ல, சும்மா ஃபைட் சீன்களையும், பில்டப் காட்சிகளையும் மட்டுமே வைத்து படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். ஆரம்பம் முதல் கடைசி வரை என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. கடைசியில் ஏதோ ட்விஸ்ட் மாதிரி வைத்திருக்கிறார்கள், அதுவும் சத்தியமாக புரியவில்லை. மேக்கிங் வைஸ் ஓகே. ஆனால் டயலாக்குகள் ரொம்பவும் ஏமாற்றம் தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்காங்க, பழைய தெலுங்கு படங்களில் கேட்டது போலவே இருக்கிறது என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

பெரிய ஏமாற்றம்: மற்றொரு ரசிகர், படம் ஒன்னுமே புரியல, கோவா கேங்க்ஸ்டர் கதை தான். இரண்டு வருடத்திற்கு முன்னாடியே படத்தின் மீது ஒரு ஹைப்பை ஏற்படுத்திவிட்டார்கள். ஆனால், தற்போது படம் அதை பூர்த்தி செய்யவில்லை. ஹீரோவின் கேரக்டரையே சரியாக பயன்படுத்தவில்லை. டபுள் ரோல், ட்ரிபிள் ரோல், பிளாஸ்ட், ஃபைட் என மேக்கிங் மட்டும் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஆனால் அதற்குள் ஒரு கதை இருக்கிறதா என்றால் இல்லை. கேரியரில் இரண்டு சிறந்த படங்களை கொடுத்த பிறகு இப்படியொரு படத்தை ஏன் யாஷ் கொடுத்திருப்பது ரொம்பவே ஏமாற்றமாக இருக்கிறது. மொத்தத்தில், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வந்தவர்களுக்கு இது ரொம்பவே டிஸப்பாயிண்ட்மென்ட் என்றார்.

கதையே இல்ல: படம் பார்த்த மற்றொருவர் கே.ஜி.எஃப் மாதிரி ஒரு படத்தை எதிர்பார்த்துதான் வந்தோம். யாஷ் வந்து அவ்வளவு ஃப்ரேம் ஹெவியான, பெரிய மாஸ் ஹீரோ. அதனால் இந்தப் படத்தையும் ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணினோம். ஆனால், அந்த எதிர்பார்ப்பை எல்லாமே சுத்தமாக சொதப்பிட்டாங்க. நல்லாவே இல்ல. கதை இல்லாதது மிகப்பெரிய பிரச்சனை. யாருக்குமே சரியான ரோல் கிடையாது. யாஷ் ஏற்கனவே ஒரு பெரிய மாஸ் ஹீரோவாகிவிட்டார். அவரை இவ்வளவு பெரிய ஃப்ரேமில் வைத்து, லோக்கல் ஸ்டோரி மாதிரி பண்ணியிருப்பது ரொம்ப தப்பு. இவ்வளவு பெரிய ஹீரோவை வைத்து படம் பண்ணும்போது கண்டிப்பாக இன்னும் பெட்டரான கதை இருக்க வேண்டும். யாஷ் இருக்கிற அந்த மாஸ் ஃப்ரேமுக்கு ஏற்ற மாதிரி படம் இருக்கணும்.

இயக்குநர் தான் பிரச்சனை: என்னைப் பொறுத்தவரைக்கும் பிரச்சனை டைரக்டர்தான். எந்த டைரக்டர் படம் பண்ணினாலும், ஸ்டோரி நல்லா இருந்தால் மட்டும் தான் படம் ஓடும். இப்போ மக்களுக்கு எல்லாமே தெரியும். ஹீரோ பெரியவர், பட்ஜெட் பெரியது, மேக்கிங் பிரம்மாண்டம் என்று மட்டும் வைத்து படத்தை ஓட்ட முடியாது. நல்ல கதை இருந்தால் படம் ஓடும் சமீபத்தில் வந்த சிறை மாதிரியான படங்களைப் பாருங்கள். நல்ல கதை இருந்ததால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. எந்தப் படமாக இருந்தாலும் கதை நல்லா இருந்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் இவ்வளவு பெரிய பட்ஜெட் போட்டு, ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்து, கதை இல்லாமல் மாஸ் காட்டுவதில் என்ன பயன்?

தியேட்டரில் கத்துறாங்க: இந்தப் படத்தில் யாருக்குமே சரியான ரோல் இல்லை. நயன்தாராவுக்கு மட்டும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்துஇருக்காங்க, நாங்கள் ரொம்ப எக்ஸ்பெக்டேஷனோடு வந்தோம். ஆனால் அந்த எதிர்பார்ப்பு எல்லாமே தப்பாகிப் போய்விட்டது. கதை புரியாததால், தியேட்டரில் எல்லாருமே கத்திக்கொண்டே இருக்காங்க, எந்தக் காட்சியிலும் என்ன நடக்கிறது என்பதை சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. மொத்தத்தில், யாஷ் மாதிரி ஒரு பெரிய மாஸ் ஹீரோவை வைத்து இவ்வளவு பிரம்மாண்டமாக படம் பண்ணிவிட்டு, கதையை மட்டும் இவ்வளவு மோசமாக விட்டிருப்பது தான் மிகப்பெரிய ஏமாற்றம் என அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.