📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News October 06, 2026 11:04 AM

உக்ரைனில் மருந்து பொருட்கள் குடோனில் ரஷியா தாக்குதல்

உக்ரைனில் மருந்து பொருட்கள் குடோனில் ரஷியா தாக்குதல்

உக்ரைனில் இந்தியருக்கு சொந்தமான மருந்து பொருட்கள் குடோனில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஊழியர் உயிரிழந்தார்.

உக்ரைன் - ரஷியா போர்

உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் சுமி நகரில் உள்ள மருந்து பொருட்கள் குடோன் மீது ரஷியா நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாகுதலில் மருந்து குடோனில் வேலை செய்து வந்த 52 வயதான ஊழியர் உயிரிழந்தார். இந்த மருந்து பொருட்கள் குடோன் இந்தியருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.