📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News August 23, 2026 12:04 PM

உலகிலேயே எந்த டீமும் இவ்ளோ மோசமாக ஆடியதில்லை.. பாகிஸ்தான் படுமோசமான சாதனை.. 2 இன்னிங்சிலும் டக்

உலகிலேயே எந்த டீமும் இவ்ளோ மோசமாக ஆடியதில்லை.. பாகிஸ்தான் படுமோசமான சாதனை.. 2 இன்னிங்சிலும் டக்

உலகிலேயே எந்த டீமும் இவ்ளோ மோசமாக ஆடியதில்லை.. பாகிஸ்தான் படுமோசமான சாதனை.. 2 இன்னிங்சிலும் டக்

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி உலக அளவில் ஒரு மோசமான சாதனையைப் படைத்துள்ளது. அதிக முறை ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் ரன் ஏதும் எடுக்காமல் முதல் விக்கெட்டை இழந்துள்ளது.

இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில், பாகிஸ்தான் தொடக்க வீரர் அசான் அவாய்ஸ் 1 பந்தை மட்டுமே எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ஆலி ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸிலும் மற்றொரு தொடக்க வீரரான இமாம்-உல்-ஹக் 5 பந்துகளைச் சந்தித்து 0 ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதன் மூலம் இரண்டு இன்னிங்ஸிலும் பாகிஸ்தான் அணி 0 ரன்களில் இருக்கும் போதே தங்களது முதல் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி அளித்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் 0 ரன்களுக்கு முதல் விக்கெட்டைப் பறிகொடுப்பது பாகிஸ்தான் அணிக்கு இது 7 வது முறையாகும். இதன் மூலம் உலக கிரிக்கெட் வரலாற்றில் இந்த மோசமான சாதனையை அதிக முறை சந்தித்த முதல் அணி என்ற பெயரைப் பாகிஸ்தான் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடியுள்ள 472 டெஸ்ட் போட்டிகளில் இந்த நிகழ்வு 7 முறை நடந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து அணி 1098 டெஸ்ட் போட்டிகளில் 5 முறையும், ஆஸ்திரேலியா 4 முறையும், இந்திய அணி 2 முறையும் இந்த மோசமான சாதனையைச் சந்தித்துள்ளன. நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்ற நாடுகள் தலா ஒரு முறை இந்த மோசமான சாதனையை செய்துள்ளன.

பாகிஸ்தான் அணி முதன்முதலாக கடந்த 1979 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் விளையாடிய போது தங்களது இரண்டு இன்னிங்ஸிலும் 0 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. அதன் பிறகு 1982 இல் இங்கிலாந்துக்கு எதிராகவும், 1997 இல் இலங்கை, 2002 இல் ஆஸ்திரேலியா, 2013 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் இதேபோல் முதல் விக்கெட்டை 0 ரன்களுக்கு இழந்தது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியிலும் இதே போன்ற மோசமான தொடக்கத்தைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் மூலமாக 7 வது முறையாக இந்த மோசமான சாதனையைப் பாகிஸ்தான் பதிவு செய்துள்ளது.