📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 07, 2026 08:34 PM

“ஊழலை ஒழித்ததால் டாஸ்மாக் வருமானம் அதிகரித்தது”

“ஊழலை ஒழித்ததால் டாஸ்மாக் வருமானம் அதிகரித்தது”

“ஊழலை ஒழித்ததால் டாஸ்மாக் வருமானம் அதிகரித்தது”- அமைச்சர் விக்னேஷ்

தவெக ஆட்சியில் மூடப்பட்ட 717 கடைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் மதுக்கடைகளை குறைக்கப் போகிறதா தவெக அரசு? என எ.வ வேலு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் விக்னேஷ், “ஊழலை ஒழித்ததால் டாஸ்மாக் நிர்வாகத்தில் வருமானம் அதிகரித்தது. மதுவினால் வரும் வருமானத்தை உயர்த்துவோம் என தவெக கூறாது. தவெக ஆட்சியில் மூடப்பட்ட 717 கடைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மதுபானம் மக்களுக்கு எளிதாக கிடைக்கக்கூடாது என்பதில் எங்களுடைய அரசு உறுதியாக உள்ளது. தவெக அரசு மதுக்கடைகளுக்கு எதிரான அரசு. 2011ல் இருந்தே டாஸ்மாக் கடை பிரச்சினை உள்ளது. தமிழ்நாட்டில TASMAC Wine Shop-ல MRP-ஐ விட கூடுதல் விலைக்கு விக்கிறதை தடுக்க மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களின் TVK அரசு online payment கொண்டு வந்திருக்காங்க” என்றார்.