📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 18, 2026 06:34 PM

வேலைக்குத் திரும்பும் பெண்களுக்கான ஆதரவு வேலையைக் கைவிடும் முன்னரே தொடங்கப்பட வேண்டும்: ஆய்வு

வேலைக்குத் திரும்பும் பெண்களுக்கான ஆதரவு வேலையைக் கைவிடும் முன்னரே தொடங்கப்பட வேண்டும்: ஆய்வு

வாழ்க்கைத்தொழிலில் சிலகால இடைவெளிக்குப் பிறகு பெண்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புவதற்கான ஆதரவு, அவர்கள் அதற்கான முயற்சியைத் தொடங்கும்போது இருக்கக்கூடாது. மாறாக, அவர்கள் இதற்கு முன்னர் பார்த்த வேலையைவிட்டு விலகுவதற்கு முன்பே அது தொடங்கப்பட வேண்டும்.

சிங்கப்பூர் மகளிர் அமைப்புகள் மன்றம் (SCWO) வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பெண்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புதல்: சவால்கள், தடைகளும் வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் அந்த அமைப்பு நடத்திய ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

வேலை தேடுதல், மீண்டும் வேலையில் சேருதல் மற்றும் தொடர்ந்து வேலையில் நீடித்திருத்தல் உள்ளிட்ட, வாழ்க்கைத்தொழில் இடைவெளிக்குப் பிறகு பெண்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புவதில் எதிர்கொள்ளும் அனுபவங்களை ஆராய்ந்தது அந்த ஆய்வு.

‘ஆராய்ச்சி முதல் நடவடிக்கை வரை’ என்னும் அந்த அமைப்பின் மூன்றாண்டுகாலத் திட்டத்தின் முதல் பகுதியாக ஆய்வு இடம்பெற்றது. அந்தத் திட்டம் 2027ஆம் ஆண்டு குடும்ப வன்முறை குறித்தும் 2028ஆம் ஆண்டு பராமரிப்பாளர்களின் நலன் குறித்தும் கவனம் செலுத்த உள்ளது.

“மீண்டும் வேலைக்குத் திரும்புவது என்பது ஒரு பெண் மீண்டும் வேலை தேடத் தொடங்கும் ஒரு தனிப்பட்ட தருணம் மட்டும் அல்ல.

“ஆதரவு என்பது உண்மையில் ஒரு பெண் தமது வேலையைவிட்டு விலகுவதற்கு முன்பே தொடங்கி, அவர் மீண்டும் வேலைக்குத் திரும்பிய பிறகும் தொடர வேண்டும்,” என்று சிங்கப்பூர் மகளிர் அமைப்புகள் மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யானிங் கோ கூறினார்.

“இதைச் செய்ய, நமது மனப்போக்கில் ஒரு மாற்றமும் பொதுவான பராமரிப்புப் பணிகளைப் நாம் பார்க்கும் விதத்தில் மறுபரிசீலனையும் தேவைப்படுகின்றன.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“பெண்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதுடன் மட்டும் நின்றுவிடாமல், பொருத்தமான வாய்ப்புகள் அவர்களுக்கு உள்ளனவா, அவர்களை மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ள வேலையிடங்கள் தயாராக உள்ளனவா, அவர்கள் பணிக்குத் திரும்பிய பிறகு தொடர்ந்து நீடித்து வளர்ச்சி பெற முடிகிறதா என்பதையும் நாம் ஆராய வேண்டும்,” என்றார் அவர்.