📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News August 29, 2026 01:03 PM

வெளிநாட்டு மீட்பு குழுக்களை நேபாளம் நிராகரிக்​க காரணம்​ என்ன?

வெளிநாட்டு மீட்பு குழுக்களை நேபாளம் நிராகரிக்​க காரணம்​ என்ன?

காத்​மாண்​டு: நே​பாளத்​தில் பெரு​வெள்ளத்​தால் பெரும் பாதிப்பு ஏற்பட்​டுள்ள போதி​லும் வெளிநாட்டு மீட்பு குழுக்​களை அந்த நாடு நிராகரித்​து உள்​ளது. நேபாள வெள்​ளத்​தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்​ணிக்கை 500-ஐ கடந்​துள்ள நிலை​யில், மாய​மான நூற்றுக்கணக்​கானோரை தேடும் பணி​யில் மீட்பு குழுக்​கள் தீவிரமாக ஈடு​பட்​டுள்​ளன.

மிக​வும் மோச​மான பேரிடரை எதிர்​கொண்​டுள்ள நேபாளத்​துக்கு பல்​வேறு நாடு​களும் உதவி​களை வழங்கி வரு​கின்​றன. முதல் நாடாக இந்​தியா 10 டன் நிவாரண பொருட்​களை நேபாளத்​துக்கு அனுப்​பியது. அதன் தொடர்ச்​சி​யாக 37 டன் நிவாரண பொருட்களுடன் 2-வது விமானத்தை நேற்று முன்​தினம் அனுப்பியது. இதே​போல பல நாடு​களும் நேபாளத்​துக்கு நிவாரண உதவி​யும், நிதி உதவி​யும் வழங்க முன்​வந்​துள்​ளன.

அதே நேரத்​தில் தேடு​தல் மற்​றும் மீட்பு பணி​களுக்​காக மீட்பு குழுக்களை அனுப்ப இந்​தி​யா, அமெரிக்​கா, சீனா, தென்​கொரியா உள்​ளிட்ட பல நாடு​கள் முன்​வந்த நிலை​யில் நேபாளம் அதை நிரகாரித்துவிட்​டது.

தங்​கள் நாட்​டின் ராணுவம், காவல்​துறை மற்​றும் பிற பாது​காப்பு அமைப்​பு​களுக்கு தேடு​தல் மற்​றும் மீட்பு பணி​களை மேற்கொள்வதற்​கான ஆற்​றலும், திறமை​யும் இருப்​ப​தாக​வும், எனவே வெளி​நாட்டு உதவி தேவை​யில்லை என்​றும் பிரதமர் பாலேந்​திர ஷா அரசு முடிவு செய்​துள்​ள​தாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளி​யிட்​டுள்​ளன.

குறிப்​பாக,“உதவி கோரு​வது இயல்​பானது. எங்​கள் பாது​காப்பு அமைப்​பு​கள் தேடு​தல் மற்​றும் மீட்​புப் பணி​களை மேற்​கொண்டு வரு​கின்​றன. தற்போதைக்கு எங்​களுக்கு அத்​தகைய உதவி தேவையில்​லை,” என்று நேபாள வெளி​யுறவு அமைச்​சகத்​தின் செய்​தித் தொடர்​பாளர் லோக் பகதூர் சேத்ரி தெரி​வித்​ததாக செய்திகள் வெளி​யாகி உள்​ளன.

என்ன காரணம்?

நேபாள அரசின் இந்த முடி​விற்கு கடந்த காலத்​தில் கற்ற பாடமே காரணம் என்று சொல்​லப்​படு​கிறது. இதற்கு முன் கடந்த 2015-ம் ஆண்டு நேபாளம் இதே​போன்று மிகப்​பெரிய பேரிடரை சந்தித்தது. 2015 ஏப்​ரல் 25-ம் தேதி கோர்கா மாவட்​டத்​தில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இதில் கிட்டத்தட்ட 9,000 பேர் உயிரிழந்​தனர். 23,000-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர்.

இதைதொடர்ந்​து, இந்​தி​யா, அமெரிக்கா உள்பட பல நாடு​கள் தங்களது மீட்பு குழுக்​களை நேபாளத்​துக்கு அனுப்​பின. ஏராளமான ராணுவ விமானங்​கள், ஹெலி​காப்​டர்​கள் நேபாளத்தில் குவிந்​தன. இதனால் நேபாள அரசு கடுமை​யான தளவாட மற்​றும் நிர்​வாக அழுத்​தங்​களுக்கு உள்​ள​னாது.

வெளி​நாட்டு மீட்​புக் குழுக்​களுக்​கிடையே​யான போட்டி மற்​றும் அவர்​களின் நகர்​வு​களை ஒருங்​கிணைப்​ப​தில் ஏற்​பட்ட சிரமங்கள், ஏற்​க​னவே விமான நிலை​யங்​கள், சாலைகள் மற்​றும் தகவல்​தொடர்பு அமைப்​பு​கள் கடும் அழுத்​தத்​தில் இருந்த சூழலில் நிலை​மையை நிர்​வகிப்​பதை மேலும் சிக்​கலாக்​கியது. இதனை கருத்​தில் கொண்டே இந்த முறை வெளி​நாட்டு மீட்பு குழுக்​களின் வருகையை நேபாள அரசு நிராகரித்​துள்​ளது.

நிதி உதவியை கோரு​கிறது

இருப்​பினும், நேபாளம் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவியை நாடு​கிறது. குறிப்​பாக மறு​வாழ்வு மற்​றும் மறுகட்​டு​மானப் பணிகளின் போது மேலும் நிதி மற்​றும் பொருள் சார்ந்த உதவிகளை நாட அந்​நாடு எதிர்பார்க்​கிறது. சில நாடு​கள் ஏற்கனவே நிதி​யுத​வியை அறிவித்துள்​ளன. மற்ற நாடு​கள் மீட்​பு, நிவாரணம், மறு​வாழ்வு மற்றும் புனரமைப்​புப் பணி​களுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன. ஆப்​பிள் நிறு​வனத்​தின் தலை​மைச் செயல் அதிகாரி டிம் குக்​கும் நன்​கொடைகள் வழங்​கு​வ​தாக உறுதியளித்துள்​ளார்.

அமெரிக்​கா, இங்​கிலாந்து மற்​றும் உலக வங்கி ஆகிய​வை​யும் நிதி உதவியை அறி​வித்​துள்​ளன. ஆசிய வளர்ச்சி வங்​கி​யின் தலை​வர் மசாடோ கண்​டா, “உடனடி அவசர​கால உதவிக்கு அப்பால், சிறந்த இடர் மதிப்​பீடு​கள், முன்​கூட்​டியே எச்​சரிக்​கை செய்​யும்​ அமைப்​பு​கள்​ மற்​றும்​ உயிர்​களைப்​ ​பாது​காக்​க உதவும்​ வலு​வான உள்​கட்​டமைப்​பு ஆகிய​வற்​றின்​ மூலம்​ த​யார்​நிலையையும்​ மீள்​திறனை​யும்​ வலுப்​படுத்​த நே​பாளத்​திற்​கு ​நாங்கள்​ தொடர்​ந்​து ஆதர​வளிப்​போம்​” என தெரிவித்​துள்​ளார்​.