📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Australia Tamil October 15, 2026 02:03 PM

"வெஸ்ட் இண்டீசுக்கே இப்படி என்றால் ஆஸ்திரேலியா வந்தால் என்ன செய்வாங்களோ".. பவுலர்களை வெளுத்த கைஃப்

"வெஸ்ட் இண்டீசுக்கே இப்படி என்றால் ஆஸ்திரேலியா வந்தால் என்ன செய்வாங்களோ".. பவுலர்களை வெளுத்த கைஃப்

"வெஸ்ட் இண்டீசுக்கே இப்படி என்றால் ஆஸ்திரேலியா வந்தால் என்ன செய்வாங்களோ".. பவுலர்களை வெளுத்த கைஃப்

ஹைதராபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் 247 ரன்களை வாரி வழங்கிய நிலையில், "இந்த பந்துவீச்சு குழுவை வைத்துக்கொண்டு இந்திய அணியால் உலகக்கோப்பையை ஒருபோதும் வெல்ல முடியாது" என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் குவித்தது. கடின இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 223 ரன்களுக்கு ஆட்டமிழந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.

இந்திய அணியின் பலவீனமான பந்துவீச்சு குறித்துப் பேசிய முகமது கைஃப், "இந்திய அணியின் தோல்விக்கு முழு முதற் காரணமே பந்துவீச்சுதான். 247 ரன்கள் என்பது மிகப்பெரிய ஸ்கோர். பவுலர்கள் படுமோசமாக வீசியதால்தான் நாம் தோற்றோம். பொதுவாக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பேட்டர்கள் 3 போட்டிகளை வென்று கொடுத்தால், மீதி 2 போட்டிகளை பந்துவீச்சாளர்கள் வென்று தர வேண்டும். ஆனால் நமது பந்துவீச்சாளர்கள் எந்தவொரு போட்டியிலும் வெற்றியைத் தேடித் தரவில்லை. இந்த பலவீனமான பந்துவீச்சை வைத்துக்கொண்டு டி20 உலகக்கோப்பையை இந்தியா ஒருபோதும் தக்கவைக்க முடியாது.

அடிப்படை விஷயங்களைக் கூட நமது பவுலர்கள் சரியாகச் செய்யவில்லை. ஹைதராபாத் ஆடுகளத்தில் ஸ்லோ பவுன்சர்கள் வீசுவதே சிறந்த உத்தி. பாட் கம்மின்ஸ் இந்த மைதானத்தில் அந்த உத்தியைப் பயன்படுத்தி பல விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஆனால் இந்திய பவுலர்கள் அதை முயற்சி கூட செய்யவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்காமல் நேர விரயமும் செய்கிறார்கள். தரவரிசையில் பின்தங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கே இந்த கதி என்றால், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை எப்படி சமாளிக்கப் போகிறார்கள்?" என்று கைஃப் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

இந்தப் போட்டியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களான மயங்க் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் சேர்ந்து 8 ஓவர்களில் 104 ரன்களை வாரி வழங்கினர். அக்‌சர் படேல் 4 ஓவர்களில் 45 ரன்களைக் கொடுத்தார். தொடரைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் சனிக்கிழமையன்று பெங்களூருவில் நடைபெறவுள்ள நிலையில், கைஃபின் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.