📅 Saturday, 22 August 2026 IST | ஆவணி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 22, 2026 03:04 PM

விண்ணை முட்டும் தங்கம் விலை

விண்ணை முட்டும் தங்கம் விலை

விண்ணை முட்டும் தங்கம் விலை - நேற்று 2 முறை அதிகரித்த நிலையில் இன்று மீண்டும் உயர்வு

வெள்ளி இன்று ஒரு கிராம் ரூ. 270-க்கும், ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Published : August 22, 2026 at 10:35 AM IST

சென்னை: ஆபரண தங்கம் 22 காரட்டின் விலை இன்று சவரனுக்கு ரூ. 800 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,19,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. வரும் காலங்களில் தங்கம் விலை குறைவதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக, பெரும்பாலான நாட்களில் காலை, மாலை என இரண்டு முறை அதிகரித்து நகை வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளித்து வருகிறது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,05,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் 20 நாட்களில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்திருக்கிறது. இந்த விறுவிறு விலை ஏற்றத்திற்கு உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. அதே சமயம், இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கி இருப்பதும் நமது நாட்டில் தங்கம் விலை உயர்வதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

நேற்று (ஆகஸ்ட் 21) காலை கிராமுக்கு ரூ. 110 அதிகரித்த நிலையில், மாலையில் ரூ. 140 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 14,850-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ரூ. 100 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 14,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, நேற்று காலை சவரனுக்கு ரூ. 880 அதிகரித்த நிலையில், மாலையில் ரூ. 1,120 அதிகரித்து ரூ. 1,18,800-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று காலை ரூ. 800 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,19,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 14,950

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,19,600

வெள்ளி ஒரு கிராம் - ரூ. 270

வெள்ளி ஒரு கிலோ - ரூ. 2,70,000

கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை

வெள்ளி விலையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. நேற்றைக்கு முன்தினம் கிராமுக்கு ரூ. 10 அதிகரித்த நிலையில், நேற்று காலை, மாலை தலா ரூ. 5 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 270-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று விலை மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகிறது. அதன்படி, இன்று ஒரு கிலோ ரூ. 2,70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.