📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 07, 2026 10:03 AM

வியர்வை சிந்திய இளம் வீரரை விட்டு சூர்யகுமாருக்கு அணியில் இடம் கொடுக்க முடியாது.. மும்பை விளக்கம்

வியர்வை சிந்திய இளம் வீரரை விட்டு சூர்யகுமாருக்கு அணியில் இடம் கொடுக்க முடியாது.. மும்பை விளக்கம்

வியர்வை சிந்திய இளம் வீரரை விட்டு சூர்யகுமாருக்கு அணியில் இடம் கொடுக்க முடியாது.. மும்பை விளக்கம்

மும்பை: ரஞ்சி கோப்பை தொடருக்கான மும்பை அணியில் இருந்து இந்திய டி20 அணியின் முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தை மும்பை கிரிக்கெட் சங்கம் தற்போது கூறி உள்ளது.

2026-27 சீசன் ரஞ்சி கோப்பை தொடர் வரும் அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்குகிறது. சண்டிகர் அணிக்கு எதிரான முதல் போட்டிக்கான 16 பேர் கொண்ட மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்படவில்லை. தான் விளையாடத் தயார் என அவர் அறிவித்திருந்தும் தேர்வுக்குழு அவரைப் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சூர்யகுமாரின் ஒழுங்கீனமே இந்த நீக்கத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. மும்பை வீரர்கள் கடந்த ஒரு மாதமாக வான்கடே மற்றும் பிகேசி மைதானங்களில் தீவிர பயிற்சி முகாமில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் சூர்யகுமார் யாதவ் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்காமல் முழுமையாகப் புறக்கணித்துள்ளார். மேலும் 10 நாட்களுக்கு முன்பு தேர்வுக்குழுவினர் அவரைத் தொடர்பு கொண்டபோது அவர் எவ்வித பதிலும் அளிக்காமல் தவிர்த்துள்ளார். கடைசி நேரத்தில்தான் தான் விளையாடுவதாகத் தகவல் அனுப்பியுள்ளார்.

இது குறித்து மும்பை கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் கூறுகையில், "கிரிக்கெட் என்பது கூட்டு முயற்சி. ஒரு மாதமாக வியர்வை சிந்தி பயிற்சி பெற்ற ஒரு இளம் வீரரை நீக்கிவிட்டு, பயிற்சிக்கு வராத ஒருவருக்கு இடம் கொடுப்பது நியாயமல்ல. சூர்யகுமாருக்கு சமீபகாலமாக சிவப்பு பந்து (டெஸ்ட்) போட்டிகளில் ஆடிய அனுபவமும் இல்லை" என்று தெரிவித்தன.

மேலும், சூர்யகுமார் உள்ளூர் கிளப் போட்டிகளில் விளையாடி தனது உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே ரஞ்சி அணிக்கு மீண்டும் பரிசீலிக்கப்படுவார் எனவும் மும்பை அணி நிர்வாகம் கூறி உள்ளது. அதேநேரம் அடுத்து நடக்க இருக்கும் உள்ளூர் டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து பரிசீலிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 11 முதல் 14 வரை நடைபெறும் முதல் ரஞ்சி போட்டியில் சித்தேஷ் லாட் தலைமையில் களமிறங்கும் மும்பை அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். காயம் அடைந்த ஷர்துல் தாக்கூர் ஒரு மாதம் ஓய்வில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.