Tamil Nadu
August 12, 2026 03:04 PM
10 நிமிடம் அனுமதி: சபாநாயகர் அறிவிப்பு
சென்னை: ''அனைவரின் உடல்நிலையை கருத்தில் வைத்து, வரும் 17ம் தேதி முதல், ஒருவருக்கு 10 நிமிடங்கள் தான் பேச அனுமதி வழங்கப்படும்,'' என, சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்றைய விவாதம் முடியும்போது, சபாநாயகர் பிரபாகர் கூறியதாவது:
கடந்த ஆட்சிகளில், 7 முதல் 10 நிமிடங்கள்தான், சபையில் பேச அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆட்சியில், புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதால், 20 நிமிடங்களுக்கு மேல் வாய்ப்பு தரப்பட்டது. அவை நீண்ட நேரம் செல்கிறது. அதனால், நாம் அனைவரின் உடல்நலனையும் கருத்தில் வைத்து, வரும் 17ம் தேதி முதல், ஒருவருக்கு 10 நிமிடம் தான் ஒதுக்கப்படும். அதேபோல், ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வின் உயரத்திற்கு ஏற்ப, இரண்டு நாட்களில், 'மைக்' அளவு மாற்றப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu