📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 27, 2026 05:01 PM

குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வலியுறுத்து

குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வலியுறுத்து

சென்னை: குழந்தைகளிடம் புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளார்.

“திரைப்படங்களைப் பார்ப்பதைவிட புத்தகங்களை வாசிப்பது மனிதர்களின் கற்பனைத் திறனை பன்மடங்கு விரிவடையச் செய்யும்,” என்று சென்னையில் நடைபெற்ற ‘சடவு’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் கூறினார்.

‘எழுத்து’ தமிழிலக்கிய அமைப்பு இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘திருமதி சவுந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு’ போட்டியை நடத்தி வருகிறது.

2025ஆம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசை எழுத்தாளர் செ.ஏக்நாத்ராஜ் எழுதிய ‘சடவு’ நாவல் பெற்றுள்ளது. விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நூலாசிரியருக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையையும் விருதையும் வழங்கினார்.

தமிழ்நாடு பாடத்திட்ட வரைவுக் குழுத் தலைவருமான திரு மயில்சாமி முதல் பிரதியை வெளியிடக் கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார்.

“சோர்வில்லாத வாசிப்பு அனுபவத்தைச் ‘சடவு’ நாவல் தருகிறது என்று திரு மயில்சாமி குறிப்பிட்டார்.

புதிய சமுதாயத்தை உருவாக்கும், ஊக்கமளிக்கும் படைப்புகளைப் பெற்றோர் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து, வாசிப்புப் பழக்கத்தை அவர்களிடம் விதைக்க வேண்டும் என்றார் அவர்.