100 கோடியை நோக்கி இருமுடி.. ஐயப்பாவை கெட்டியாக பிடிக்க முடிவு செய்த ரவி மோகன்.. என்ன ஆச்சு?
சென்னை: கடந்த சில ஆண்டுகளாக பெரிய வெற்றியை பெற முடியாமல் தவித்து வந்த நடிகர் ரவி தேஜாவுக்கு இந்த வாரம் வெளியான இருமுடி திரைப்படம் 3 நாட்களில் 80 கோடி வசூலை வாரிக் குவித்த நிலையில், 100 கோடி வசூலை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. நாளை விடுமுறை தினம் என்பதால் 100 கோடி வசூலை நாளை இரவுக்குள் தொட்டுவிடும் என்கின்றனர்.
ஐயப்பா சாமி ரவி தேஜாவையும் பிரியா பவானி சங்கரையும் கைவிட வில்லை என சினிமா வட்டாரத்தில் பலரும் சொல்ல ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், ரவி மோகனும் தீவிர ஐயப்ப பக்தராக உள்ள நிலையில், ஐயப்ப சாமியையும் சபரி மலையையும் சுற்றிய படம் ஒன்றை பண்ண வேண்டும் என்கிற முடிவுக்கு வந்து விட்டார் என தகவல்கள் கசிந்துள்ளன.
ரவி மோகன் விவாகரத்துக்குப் பிறகு பெரிதளவில் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், இப்படியொரு ஆன்மிக படத்தைக் கொடுத்தால் கண்டிப்பாக கம்பேக் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.
தேங்கி நிற்கும் படங்கள்: ரவி மோகன் நடித்த ஜீனி படம் பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் தேங்கி நிற்கிறது. கராத்தே பாபு திரைப்படம் தேர்தலுக்கு முன்னதாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் கூட வருமா? என்பது சந்தேகம் தான் என்கின்றனர். மேலும், ரவி மோகன் தயாரிப்பில் உருவாகி வரும் ப்ரோ கம்பெனி, ரவி மோகன் யோகி பாபுவை ஹீரோவாக வைத்து இயக்கி வரும் ஆர்டினரி மேன் உள்ளிட்ட படங்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.
100 கோடியை நோக்கி இருமுடி: கோலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி திரைப்படம் எதிர்பாராத விதமாக 100 கோடி வசூலை கடந்து மாஸ் பண்ண நிலையில், டோலிவுட்டில் ரவி தேஜா நடித்த இருமுடி படமும் விரைவில் 100 கோடி வசூலை ஈட்டும் அளவுக்கு ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரவி மோகனும் ஐயப்ப சாமியின் அருளை பெறும் முயற்சியில் களமிறங்க உள்ளார் என்கின்றனர்.
ஐயப்பா படத்தில் ரவி மோகன்: பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்து அசத்திய ரவி மோகன் அதன் பின்னர் பெரிய வெற்றிப் படத்தை கொடுக்காமல் போராடி வருகிறார். இந்நிலையில், மாளிகபுரம் படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் ஐயப்பா சாமி பேக்டிராப் கொண்ட புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் ரவி மோகன் என தகவல்கள் கசிந்துள்ளன. அந்த படத்துக்கான பேச்சுவார்த்தைகளில் ரவி மோகன் ஈடுபட்டு வருகிறாராம். ஆண்டுதோறும் சபரி மலைக்கு சென்று ஐயப்பனின் பக்தராகவே மாறிய ரவி மோகன் "பள்ளிக்கட்டு சபரிமலைக்கு" என ஐயப்பா கதையில் நடித்தால் கண்டிப்பாக கச்சிதமாக இருக்கும் என்கின்றனர். சூர்யாவுக்கு கருப்பசாமி கை கொடுத்தது போல ரவி மோகனுக்கு ஐயப்பா கம்பேக் கொடுப்பார் என்கின்றனர்.