📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 25, 2026 03:04 PM

மேட்டூர் அணை திறப்பு எப்போது? விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார் அமைச்சர்

மேட்டூர் அணை திறப்பு எப்போது? விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார் அமைச்சர்

சென்னை: மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் திமுக எம்எல்ஏ கோவி செழியன் பேசியதாவது: டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியில் தண்ணீர் எப்பொழுது திறக்கப்படும் என்ற ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். சட்டசபை நடந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அந்த அறிவிப்பு வருமா என்று காத்திருக்கிறார்கள்.

மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? அரசு அறிவிக்க இயலுமா? இவ்வாறு அவர் பேசினார். இதற்கு கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பதில் அளித்தார்.

தீர்மானம் நிறைவேற்றம்

தீர்மானத்திற்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம் ஆதரவு தெரிவித்தது.பிறகு அரசு சார்பில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்