100 டாலரை கடந்த கச்சா எண்ணெய்: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் அபாயம்
புதுடெல்லி,
வளைகுடா போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை தாண்டிவிட்டது. ஆகவே இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலைகள் உயரும் அபாயம் உள்ளது
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் பிப்ரவரி 28-ஆம் தேதி தாக்குதலை தொடங்கின. இதையடுத்து ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடுவதாக அறிவித்தது.
இதனால் பெட்ரோலிய எரிபொருள் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. போர் தொடங்கிய சமயத்தில் ஒரு பீப்பாய் விலை சராசரியாக 60 டாலருக்கு கீழ் இருந்தது.
ரூ.1,000 கோடி இழப்பு
அந்த விலை படிப்படியாக ஏறி 125 டாலர் என்ற நிலைக்கு வந்தது. இதனால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டன. இந்தியாவும் கடுமையாக சிக்கலை சந்தித்தது.
எண்ணெய் நிறுவனங்கள் தினமும் ரூ.1,000 கோடி இழப்பை சந்தித்து வருவதாக கூறப்பட்டது. எனவே பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டன. குறிப்பாக சமையல் எரிவாயு விலை மிகமிக அதிகமாக உயர்த்தப்பட்டது.
போர்ச் சூழல்
வளைகுடாவில் ஓரளவு அமைதி திரும்பியதால் மீண்டும் எரிபொருள் சப்ளை சீரானது. அதனால் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியது. மீண்டும் 70 டாலரை நோக்கி இறங்கியது.
மீண்டும் பதற்றம்
இதனால் வெகுண்ட ஈரான், பதிலடி நடவடிக்கையில் இறங்கியது. அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை தாக்கியது. நேற்று 20 கப்பல்களை ஈரான் தாக்கியதாக கூறியுள்ளது.
3 நிறுவனங்கள்
ஆகவே இதைச் சமாளிக்க இந்த எரிபொருள்களின் விலைகள் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.